சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?
அயோத்தி வழக்கு- நவ.15-ல் தீர்ப்பு?
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூன்றும் 2.77 ஏக்கர் நிலத்தை சரி சமமாக பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்தியஸ்த குழு அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது. ஆனால் அக்குழுவின் முயற்சிகள் பலன் தரவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இம்மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் முதல் நாள்தோறும் நடத்தியது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது.
அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 3 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய இறுதி கட்ட் விசாரணையின் போது ஒவ்வொருதரப்பும் ஆணித்தரமாக தங்களது கருத்துகளை முன்வைத்ததால் உச்சநீதிமன்றம் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது..
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். ஆகையால் அதற்கு முன்னதாக நவம்பர் 15-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications