அயோத்தி வழக்கில் திருப்பம்.. 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அயோத்தி வழக்கு: 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்.. வீடியோ

    டெல்லி: அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுதான் அயோத்தி பிரச்சனை குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்தும்.

    இது வெறும் நிலம் சார்ந்த பிரச்சனை கிடையாது.. இது மனம் மற்றும் உணர்வு சார்ந்த பிரச்சனை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த அயோத்தி வழக்கின் விசாரணையின் போது குறிப்பிட்டார். அதனால் இந்த வழக்கு விசாரணையில் மத்தியஸம் பேசும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

    அயோத்தி வழக்கு மீண்டும் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து நடந்து கொண்டு இருக்கிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    மசூதி இடிப்பு

    மசூதி இடிப்பு

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதியில் இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

    முறையீடு

    முறையீடு

    இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    கடந்த விசாரணையின் போது இந்த வழக்கில் மத்தியஸம் பேசும் அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் இந்த மத்தியஸம் பேசும் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டது.

    6 நீதிபதிகள்

    6 நீதிபதிகள்

    இதையடுத்து உச்ச நீதிமன்றம் மத்தியஸம் பேசும் நபர்களை மனுதாரர்களே தேர்வு செய்யலாம் என்று கூறியது. முன்னாள் நீதிபதிகளை தேர்வு செய்யும்படி நீதிமன்றம் கூறியது. இதையடுத்து இந்து அமைப்பான நிரோகி அகாரா, மற்ற இஸ்லாமிய அமைப்புகள் 6 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்தது.

    இன்று உத்தரவு

    இன்று உத்தரவு

    இந்த முடிவு மீதுதான் நீதிமன்றம் இன்று தனது உத்தரவை பிறப்பிக்க உள்ளது. அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேசும் குழு நியமிக்கப்படுமா என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

     இன்று உத்தரவு

    இன்று உத்தரவு

    இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக உச்ச நீதிமன்றம் இதில் மத்தியஸ்தர் குழுவை அமைத்து இருக்கிறது. மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சனையை பேசி தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்படும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+