அயோத்தி வழக்கு.. மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.. ஆகஸ்ட் 3ல் விசாரணை!
அயோத்தி வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.
டெல்லி: அயோத்தி வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தற்போது அயோத்தி வழக்கு மீண்டும் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் இதில் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது. மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சனையை பேசி தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி வரை மத்தியசம் பேச அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது மத்தியச குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் மத்தியசம் பேச கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஜூலை 31 வரை மத்தியஸம் பேச அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அயோத்யா வழக்கில் அமைக்கப்பட்டு இருந்த மத்தியஸ குழு நாளை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது.மத்தியஸத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் அல்லது முடிவு குறித்து குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
சீல் செய்யப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்கிறது. முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு குழு அறிக்கையை தாக்கல் செய்கிறது.
இதன்பின் அயோத்யா வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும். அதன்பின் தினமும் தினப்படி முறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications