ராமர் கோயில் கும்பாபிஷேகம்! அயோத்தியில் பஸ்கள், ரயில்கள் நிற்காது.. வந்த புது அறிவிப்பு! என்ன காரணம்
டெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜன.22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில், அங்கே சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்துக்களின் புனித கடவுளான ராமர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அங்கே இப்போது மிகவும் பிரம்மாண்டமாக ஒரு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதற்குக் கும்பாபிஷேகம் அடுத்த வாரம் நடக்கும் நிலையில், பக்தர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த வாரம் ஜன. 22ஆம் தேதி நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோயில்: ஜன. 22ஆம் தேதி பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அன்றைய தினம் நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் அயோத்திக்கு வருகை தரவுள்ளனர். அதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் ரயில்கள், பேருந்துகள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் அடுத்த வாரம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில், இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே ஒவ்வொரு 100 மீட்டருக்கும் போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
போலீசார்: தடுப்புகளுக்கு அருகிலேயே அதிகப்படியான உபி போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கே செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுகிறது. தீவிர சோதனைக்குப் பின்னரே அங்கே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. தற்போது அயோத்தியில் சுமார் 13,000 உத்திர பிரதேச போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள்: அயோத்தியில் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்யக் கும்பாபிஷேகம் நடக்கும் ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் அயோத்தி டிப்போவில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது. மேலும், ஜனவரி 22ம் தேதி அயோத்தி தாம் சந்திப்பில் எந்தவொரு ரயில்களும் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே பல்வேறு தரப்பினரும் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போக்குவரத்து சீராக இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"வாழ்க்கையில் இப்படி உணர்ந்ததே இல்லை!" எமோஷனலான பிரதமர் மோடி! ராமர் கோயில் கும்பாபிஷேகம்! நெகிழ்ச்சி
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிலையில், அதற்குப் பிரதமர் மோடி 11 நாள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். 120 கோடி இந்தியர்கள் சார்பில் தான் கலந்து கொள்வதாக அவர் கூறியுள்ள நிலையில், தான் மிகவும் எமோஷ்னலாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..
பிரதமர் மோடி: இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, "அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.. ஜனவரி 22இல் கும்பாபிஷேக நாளில் அனைவரும் அயோத்திக்கு வர ஆசைப்படுகிறார்கள். ஆனால், அனைவராலும் ஒரே நேரத்தில் வர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப வரலாம்.. நாம் ஏற்கனவே 550 ஆண்டுகள் காத்திருந்தோம், தயவுசெய்து இன்னும் சில காலம் காத்திருங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications