"வாழ்க்கையில் இப்படி உணர்ந்ததே இல்லை!" எமோஷனலான பிரதமர் மோடி! ராமர் கோயில் கும்பாபிஷேகம்! நெகிழ்ச்சி
டெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 22ஆம் தேதி நடைபெறும் நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி ஆடியோ மெசேஜ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22இல் நடைபெறுகிறது. பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் புதிய ஏர்போர்ட் கட்டப்பட்டுள்ள நிலையில், அதிகப்படியான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
ராமர் கோயில்: வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 நாள் சடங்குகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எமோஷ்னலாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 10 நிமிட ஆடியோ மெசேஜ் ஒன்றைப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி அந்த ஆடியோவில், "நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் முதல்முறையாக, இதுபோன்ற உணர்வுகளை நான் அனுபவிக்கிறேன்.. இந்த கும்பாபிஷேக விழாவைக் காண முடிந்தது எனது அதிர்ஷ்டம்,, இது வரலாற்று ரீதியாக முக்கியமானது.. மிகவும் புனிதமான தருணம். இந்த நேரத்தில் அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாகக் கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
விரதம்: இதற்குத் தயாராகவே புனித நூல்கள் மற்றும் துறவிகளின் வழிகாட்டுதலின்படி கடுமையான விரதங்களைப் பின்பற்றி வருகிறேன். நம் சாஸ்திரங்கள் சொல்வது போல், வழிபாட்டிற்காக நமக்குள் இருக்கும் தெய்வீக உணர்வை நாம் எழுப்ப வேண்டும். இதற்காக, கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகளைச் சாஸ்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களைத் துறவிகளிடம் இருந்து பெற்றுள்ளேன். அதை இன்று முதல் பின்பற்ற ஆரம்பிக்கிறேன்" என்றார்.
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி, இது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்று கூறினார். தனது நமோ செயலி மூலம் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்துமாறு இந்தியர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
உணர்ச்சிவசப்பட்ட மோடி: அவர் மேலும் கூறுகையில், "எனது உணர்ச்சிகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். பல தலைமுறைகளின் கனவு, ஒரு வழியாக நிறைவேறுகிறது. அந்த தருணத்தில் நான் இருப்பது எனது அதிர்ஷ்டம். அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் வெறும் ஒரு கருவி மட்டுமே. இது மிகப்பெரிய பொறுப்பு" என்று பிரதமர் கூறினார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பல லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இது தொடர்பாகப் பிரதமர் மோடி, "அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஜனவரி 22இல் கும்பாபிஷேகம் நடக்கும் போது அனைவரும் அயோத்திக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் அனைவராலும் ஒரே நேரத்தில் வர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, ஒவ்வொருவரும் அவர்கள் வசதிக்கு ஏற்ப வரலாம். நாம் ஏற்கனவே 550 ஆண்டுகள் காத்திருந்தோம், தயவுசெய்து இன்னும் சில காலம் காத்திருக்கவும்" என்று அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications