டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கு தீர்ப்பு Live: அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது- மோடி பேச்சு

அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

Newest First Oldest First
6:15 PM, 9 Nov

உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு மூலம் நாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
6:15 PM, 9 Nov

இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று பொன்னாள். புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் இல்லை- மோடி.
6:09 PM, 9 Nov

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருப்பது நமது சகிப்பு தன்ன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது
6:03 PM, 9 Nov

டெல்லி

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்
5:44 PM, 9 Nov

மாலை 6 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார் மோடி. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மோடி உரை.
4:47 PM, 9 Nov

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம், சீராய்வு வழக்கு தாக்கல் இல்லை- சன்னி வக்ஃபு வாரியம் அறிக்கை
1:05 PM, 9 Nov

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் ஆதரவு. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கருத்து.
1:02 PM, 9 Nov

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி
12:26 PM, 9 Nov

அயோத்தி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த 1045 பக்க தீர்ப்பு வெப்சைட்டில் வெளியானது
11:40 AM, 9 Nov

5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை- சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு
11:40 AM, 9 Nov

உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம்- சன்னி வக்ஃப் வாரியம்
11:26 AM, 9 Nov

சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
11:25 AM, 9 Nov

வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
11:25 AM, 9 Nov

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
11:25 AM, 9 Nov

அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக வேண்டும்: உச்சநீதிமன்றம்
11:18 AM, 9 Nov

மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலததில் ராமர் கோவில் கட்ட அனுமதி
11:17 AM, 9 Nov

புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை முஸ்லீம்களுக்கு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
11:17 AM, 9 Nov

சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
11:17 AM, 9 Nov

வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
11:17 AM, 9 Nov

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
11:17 AM, 9 Nov

அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
11:16 AM, 9 Nov

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி
11:12 AM, 9 Nov

அயோத்தி நிலத்தை 3ஆக பிரித்து கொடுத்தது தவறு- உச்சநீதிமன்றம். மசூதி கட்ட சன்ன வக்ஃபு வாரியத்திற்கு மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
11:11 AM, 9 Nov

உள் பகுதியில் முஸ்லிம்களும், வெளி முற்றத்தில் இந்துக்களும் பிரார்த்தனை செய்தனர் என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது: உச்சநீதிமன்றம்
11:11 AM, 9 Nov

முஸ்லிம்கள் உள் பகுதியில் தொடர்ந்து தொழுகை நடத்தினர், முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை- உச்சநீதிமன்றம்
11:11 AM, 9 Nov

ராமரின் பிறப்பிடம் மசூதி அமைந்துள்ள உள் பகுதியில் இருப்பதாக இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள்- உச்சநீதிமன்றம்
11:11 AM, 9 Nov

அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள்
11:11 AM, 9 Nov

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை- உச்சநீதிமன்றம்
10:58 AM, 9 Nov

மதசார்பின்மை இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை என தலைமை நீதிபதி கருத்து
10:57 AM, 9 Nov

ஒருவர் மத நம்பிக்கையில் மற்றொருவர் தலையிட கூடாது- தலைமை நீதிபதி
READ MORE

Ayodhya Verdict Live Updates: SC will pronounce it tomorrow morning
English summary
Ayodhya Verdict: Supreme will pronounce it today morning at 10.30
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X