டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு- ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா மற்றும் நிர்மோனி அகாடா ஆகிய 3-ம் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தக்கல் செய்யப்பட்டன.

Ayodhya verdict: Mukhtar Abbas Naqvi meet Muslim, RSS leaders

இம்மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன்ன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.

சிவசேனா தேசியவாத காங். சேர கூடாது.. மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக!சிவசேனா தேசியவாத காங். சேர கூடாது.. மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக!

ஆகையால் அதற்கு முன்னதாக அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை ரஞ்சன் கோகாய் வழங்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் முஸ்லிம் மதகுருக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சானவாஸ் ஹூசேன் மற்றும் திரைத்துறையின் முசாஃபர் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

English summary
Union Minister Mukhtar Abbas Naqvi met Muslim clerics, RSS leaders on today ahead of Ayodhya Verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X