பஹல்காம் தாக்குதல் புதுசு கிடையாது.. இந்த பேட்டனை கவனிச்சீங்களா? பாக்+சீனாவின் சதி அம்பலமானது
டெல்லி: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதுபோல ஏற்கெனவே நடந்திருக்கிறது என்றும், திட்டமிட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு சீனா உதவியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல்களை பட்டியலிட்டு பார்த்தால், அதில் ஒரே பேட்டன் இருப்பது தெரிய வரும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பஹல்காம் தாக்குதலில் நடந்தது என்ன? துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். பயணிகளின் மத விவரங்கள் கேட்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது இந்தியாவில் திட்டமிட்ட மத கலவரங்களை ஏற்படுத்த செய்யப்படும் வேலை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு பார்ப்போம்.
- 2017: அமர்நாத் யாத்திரை பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 2022: காட்ரா பயணிகள் பேருந்தில் ஸ்டிக்கி குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- 2023: ராஜௌரி மாவட்டத்தில் 7 இந்துக்கள் படுகொலை.
- 2024: ரியாசி வைஷ்ணவி தேவி யாத்திரை பேருந்து தாக்குதல் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- 2025 (மார்ச்): கதுவாவில் 5 இந்துக்களும் ஒரு 12 வயது சிறுவனும் கொல்லப்பட்டனர்.
இது எல்லாமே மதம் சார்ந்து நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியெனில், இந்தியாவில் மத வன்முறையை திட்டமிட்டு ஏற்படுத்த இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவா அமைப்பின் ஆதிக்கம் அதிகம். ஆட்சி அதிகாரத்திலும் இந்துத்துவா சித்தாந்தத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இதனை பயன்படுத்தி மத கலவரத்தை தூண்டவே பயங்கரவாதிகளை இப்படியாக பயிற்சி கொடுத்து பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்கள்.
இந்த தாக்குதல்களில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்று பேசிய பாகிஸ்தான், இன்று ஜம்மு காஷ்மீரை பாலஸ்தீனமாக மாற்றுவோம் என சிலர் எச்சரித்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 'காஷ்மீர் ஒற்றுமை நாள்' என நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. இதில் பேசுவதற்காக ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். டாக்டர் காலித் கதூமி இவர் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய பேச்சாளர். டாக்டர் நாஜி ஜாஹீர், இவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரி. முஃப்டி ஆசம், இவர் ஹமாஸ் இயக்கத்தின் மத வழிகாட்டி. பிலால் அல்சல்லத், இவர் ஹமாஸ் இயக்கத்தின் மற்றொரு முக்கிய உறுப்பினர்.
இவர்கள்தான் காஷ்மீர் ஒற்றுமை நாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார்கள். தங்கள் உரையில் இந்தியாவை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஒன்றுப்பட வேண்டும் என்றும், காஷ்மீரை புதிய பாலஸ்தீனமாக மாற்றுவோம் எனவும், இந்தியா மீது மத அடிப்படையிலான போராட்டங்களை ஊக்குவிக்க காஷ்மீரில் மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆக இதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். இந்த திட்டத்திற்கு எதிராக இந்தியா ராணுவம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் மறுபுறம் இந்த திட்டங்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு சீனாவும் உதவியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications