ரயிலில் ஊசலாடும் உயிர்கள்! திசைதிருப்ப பாகிஸ்தான் எதையும் செய்யும்..மாஜி மேஜர் ஜெனரல் பக்ஷி வார்னிங்
டெல்லி: பலுசிஸ்தான் வேண்டி ஜாபர் எக்ஸ்பிரஸ் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இருக்கும் நிலையில் பொதுமக்களின் நிலைமை என்ன என்பது குறித்து இதுவரை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது எனவும், இந்த விவகாரத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் எதை வேண்டுமானாலும் செய்யும் எனக் கூறியிருக்கிறார் இந்தியாவில் ராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் ஜிடி பக்ஷி.
பாகிஸ்தானில் வசிக்கும் சில குழுக்கள் பலுசிஸ்தான் என தனி நாடு வேண்டுமென நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

மேலும் பலோஜ் சுதந்திர ராணுவம் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவாகி உள்ளனர். இந்த நிலையில் தான் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று பாகிஸ்தானில் முளைத்திருக்கிறது.
பாக்கின் பெஷாவர் நகரில் இருந்து பாலுஸ்தானில் உள்ள கொட்டா நகருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. ஒன்பது பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரயில் வழக்கம் போது சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த ரயிலில் பயணித்த தீவிரவாதிகள் ரயிலின் ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் காயமடைந்ததால் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி நின்றது.
இதனால் பயணிகள் அச்சமடைந்த நிலையில் தாங்கள் நிறைய ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் தீவிரவாதிகள் எச்சரித்தனர். அப்போது ரயில் இருந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தியது தாங்கள்தான் என பாலுஜ் விடுதல் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. மேலும் தங்கள் வசம் 182 பயணிகள் பிணை கைதிகளாக உள்ளதாகவும், பாதுகாப்பு படை தங்களை நெருங்கினால் பிணைக் கைதிகளில் அனைவரும் கொல்லப்படுவார்கள் என மிரட்டி உள்ளது.
மேலும் தங்களை தரை வழியாக ராணுவம் நெருங்க முடியாது எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலம் அந்த ரயிலில் இருக்கும் பயணிகளை மீட்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு வருகிறது. மேலும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும் பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தீவிரவாதிகளில் இந்த செயல் கொடூரமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த ஹைஜாக்கில் மொத்தம் எத்தனை பேர் சிக்கி உள்ளனர், இதுவரை உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவலை பாகிஸ்தான் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பொது மக்களை கூட கொல்லும் வகையில் திட்டமிட்டு இருப்பதாகவும், உலகின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் எதை வேண்டுமானாலும் செய்யும் என கூறி இருக்கிறார் இந்திய ராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் ஆன ஜிடி பக்ஷி. இது தொடர்பாக பேசியுள்ள அவர், பலுஷிஸ்தான் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்தில் மனசோர்வு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பலுசிஸ்தானில் ரயில் கடத்தல் மிகவும் முக்கியமான விஷயம். சுமார் 400 முதல் 500 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் பனைய கைதிகளாக சிக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல், பாக் ராணுவம் பெரிய பெரிய பீரங்கிகளை கொண்டு போவது போல திட்டமிட்டு வருகிறது. இதுவே நமது நாட்டின் என்எஸ்ஜி படையாக இருந்தால் உயிரிழப்புகள் எதுவும் இல்லாமல் தீவிரவாதிகளை கொன்று பணய கைதிகளை மீட்க முடியும்.
எனக்கு தெரிந்தவரை பாகிஸ்தான் ராணுவம் இந்த ராணுவ நடவடிக்கை மூலம் பல பொது மக்களை கொல்லும் என்று நினைக்கிறேன். தற்போதைய சூழலில் பலுசிஸ்தான் பிறக்கும் நேரம் வந்துவிட்டது. அதே நேரத்தில் கவனத்தை திசைதிருப்ப பாக் ராணுவம் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications