Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் டீசல் பஸ்சுக்கு தடை.. 2027 முதல் டீசல் கார்களுக்கு தடை.. மத்திய அரசுக்கு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காற்றில் டீசல் வாகனங்களால் மிகப்பெரிய அளவில் மாசு ஏற்படுகிறது. எனவே மாசுவை குறைப்பதற்கு டீசல் வாகன பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசு விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் டீசல் பஸ்களை இயக்கக்கூடாது என்று என்று மத்திய அரசுக்கு பெட்ரோலிய துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் 2027 ம் ஆண்டுக்குள் நான்கு சக்கர டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.

Ban on diesel buses from next year, Ban on diesel cars from 2027: recommendation to Central Govt

காற்றில் அதிகப்படியான மாசுவை டீசல் வாகனங்கள் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக கரியமில வாயுவை உமிழும் டீசல், பெட்ரோல் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாறி வருகின்றன. வரும் காலத்தில் மின்சார வாகன பயன்பாட்டையே ஊக்குவிக்க அரசு விரும்புகிறது.

இந்த நிலையில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை 2027 ம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பெட்ரோலிய துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தொடர்பாக எண்ணெய் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் எண்ணெய் செயலாளர் தருண் கபூர் தலைமையிலான குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது

என்ன பரிந்துரை: 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களில் எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களே அதிக பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Ban on diesel buses from next year, Ban on diesel cars from 2027: recommendation to Central Govt

மேலும் 2030 ம் ஆண்டுக்குள் மாநகர பஸ் போக்குவரத்தில் மின்சார பஸ்களே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் டீசல் பஸ்களை இயக்கக்கூடாது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து தகவல்கள் இல்லை.

தற்போதைய நிலையில் டெல்லியில் காற்று மற்றும் புகை மாசுபாட்டை கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது.

இதேபோல் சண்டிகரில் பெட்ரோல் டீசலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் பதிவுகள் கடந்த பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார வாகன பயன்பாட்டை அரசு வரிச்சலுகை கொடுத்து ஊக்குவித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+