இந்தியாவில் ரகசிய "சேஃப் ஹவுசில்" ஷேக் ஹசீனா! உள்ளே வெளியே சென்று வரும் கருப்பு கார்! என்ன நடக்குது?
டெல்லி: இந்தியாவில் ரகசிய சேஃப் ஹவுஸ் ஒன்றில் தற்போது தற்காலிகமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டு உள்ளார். ஷேக் ஹசீனாவை இந்தியா நீண்ட காலம் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. தற்போது அடைக்கலம் கொடுத்தாலும்.. அதன்பின் சவுதி அரேபியா அல்லது வேறு ஏதாவது நாட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது அவரின் வீடு இருப்பதாக கருதப்படும் பகுதிக்கு அடிக்கடி கருப்பு நிற கார் ஒன்று உள்ளே வெளியே சென்று வருவதால் அவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.,
ஷேக் ஹசீனாவை ஏற்றுக்கொள்ள இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக இவருக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்தியாவில் ரகசிய சேஃப் ஹவுஸ் ஒன்றில் தற்போது தற்காலிகமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டு உள்ளார். சேஃப் ஹவுஸ் என்றால் பொதுவாக உளவாளிகள், வெளிநாட்டு அரசியல் புள்ளிகள் ஆகியோரை தங்க வைக்க பயன்படுத்தும் இடம் ஆகும்.

கடந்த திங்கள் அன்று அவசர அவசரமாக ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வந்த நிலையில்.. அவர் மாற்று துணி இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறாராம். சேஃப் ஹவுஸ் ஒன்றில் தங்கும் அவர் மாற்று உடை இல்லாமல் கடுமையாக கஷ்டப்பட்டுக் கொண்டு உள்ளாராம்.
அவர் அவசரமாக சென்றதால்.. கூடுதல் ஆடைகள் அல்லது அன்றாட உபயோகப் பொருட்களைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வங்கதேச இராணுவத்தால் 45 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. அவர் தனது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களுடன் ராணுவ போக்குவரத்து ஜெட் விமானத்தில் இந்தியாவுக்குப் அவசர அவசரமாக வந்துள்ளார். டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார்.
ஆனால் அவர் போதுமான உடைகளை எடுத்து வரவில்லை. இதனால் தற்போது மாற்று உடை இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறாராம். தற்போது இந்தியா வந்துதான்.. அவருக்கு இந்திய அதிகாரிகள் மூலம் உடைகள், சில அன்றாட தேவைக்கான பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்னமும் அவருக்கு போதுமான, தேவையான உடைகள் வாங்கி கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா வேறு ஏதேனும் நாட்டில் அடைக்கலம் பெறும் வரை இந்தியா அவருக்கு புகலிடம் அளித்துள்ளது. இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவருக்கு தற்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தற்போது அவரின் வீடு இருப்பதாக கருதப்படும் பகுதிக்கு அடிக்கடி கருப்பு நிற கார் ஒன்று உள்ளே வெளியே சென்று வருவதால் அவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய அரசு பதவி ஏற்பு: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இவருக்கு இருக்குமா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் இவர் பதவி ஏற்பார்.
அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இடைக்கால அரசாங்கம் இரவு 8 மணிக்கு பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
யூனுஸ் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று ராணுவத் தளபதி கூறி உள்ளார். இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர் இவர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியாவிற்கு நெருக்கம். தற்போது யூனுஸ் உள்ளே வந்திருப்பது இந்தியாவிற்கு ஒரு வகையில் சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இவர் அமெரிக்காவின் சிஐஏவிற்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுவதால்.. இவரை தேர்வு செய்ததற்கு பின் வேறு சில அரசியல் அழுத்தங்கள், சர்வதேச திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications