புதிய நாடாளுமன்ற சுவரில் அது என்ன "ஓவியம்?" வரிந்துகட்டும் வங்கதேசம்.. இந்தியாவிடம் விளக்கம் கேட்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த இந்திய புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்று உள்ள சுவர் ஓவியத்தில் இருந்த வரைபடத்தை அகண்ட பாரதம் என மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்த நிலையில் இதுகுறித்து வங்கதேச அரசு விளக்கம் கேட்டு இருக்கிறது.

கடந்த வாரம் ஞாயிறு அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் பல்வேறு சுவர் ஓவியங்கள் இருந்தன. அவற்றில் இந்திய வரைபடத்துடன் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் இணைந்து இருப்பதை போன்ற ஒரு வரைபடமும் காணப்பட்டது.

அந்த வரைபடத்தில் இருந்த பகுதிகள் இந்தியில் எழுதப்பட்டு இருந்தன. அகண்ட பாரதம் அமைப்போம் என்று இந்துத்துவ அமைப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இது அகண்ட பாரதத்தின் வரைபடம் போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். இந்த பிரச்சனை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்த கருத்தால் மேலும் பூதாகரமானது.

Bangladesh govt seek explanation on akhand bharat mural in Indian new parliament

ஆம், இந்த வரைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டு "தெளிவான தீர்மானம் - அகண்ட பாதம்" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரே நாடாளுமன்ற சுவர் ஓவியம் குறித்து இவ்வாறு விளக்கம் அளித்தது இந்திய அளவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் சர்ச்சையை கிளப்பியது.

நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த சுவர் ஓவியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நேபாளத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்று உள்ளன. இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிடையே சற்று உரசல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இது அதை மேலும் அதிகரிக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் பலூச், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷின் இந்த கருத்தால் தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்து உள்ளார். அகண்ட பாரதம் என்பது தேவையற்ற கூற்று என்றும், இந்தியாவின் அண்டை நாடுகளின் அடையாளங்கள், கலாச்சாரங்களை அடிபணிய வைக்கும் தூய்மைவாத, விரிவாக்க மனோநிலை என்றும் அவர் சாடி இருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இது குறித்து பேசுகையில், "புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுவர் ஓவியம் என்பது அகண்ட பாரதம் தொடர்பானது இல்லை. அது மவுரிய பேரரசை எடுத்துக்காட்டுகிறது. அந்த சுவரோவியம் அசோகரின் சாம்ராஜ்ஜியத்தையும், அவர் ஏற்ற, பிரச்சாரம் செய்த மக்கள் சார்ந்த ஆட்சியையும் கொள்கையையும் சித்தரிக்கிறது.

சுவர் ஓவியம் முன் வைக்கப்பட்டு உள்ள பலகையிலும் அதுவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்து பற்றி நான் எதுவும் சொல்லப்போவது இல்லை." என்று கூறி உள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சரின் அகண்ட பாரத பதிவு தொடர்பாக வங்கதேச அரசு மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

வங்கதேச மக்களின் அழுத்தம் காரணமாகவே வங்கதேச அரசு விளக்கம் கோரி இருப்பதாக அந்நாட்டு ஜூனியர் வெளியுறவுத் துறை அமைச்சர் சஹ்ரியார் ஆலம் தெரிவித்து உள்ளார். "டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம், இந்திய வெளியுறவுத் துறையிடம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கத்தை கேட்டுப்பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரம் அரிந்தம் பாக்சி தெரிவித்த விளக்கத்தில் சந்தேகம் கிளப்ப விரும்பவில்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+