கொல்கத்தாவில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியீடு! டெல்லி பல்கலை வெளியே 144 தடை உத்தரவு!
நாட்டின் பல பல்கலைக் கழகங்களில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது. டெல்லி பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பல்கலைக் கழகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு உலகை அதிரவைத்த குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன. கோத்ரா ரயில் எரிப்பில் இந்து சாதுக்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிர்வினையாக இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மத மோதல்களில் சுமார் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

குஜராத் மத மோதல்களின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி மீது குறச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அனைத்து நீதிமன்றங்களும் நிராகரித்துவிட்டன.
இந்நிலையில் பிபிசி ஊடகம், குஜராத் படுகொலைகளை முன்வைத்து ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் பிரதமர் மோடியை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. இந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
டெல்லி, ஹைதராபாத், புதுச்சேரி பல்கலைக் கழகங்களில் குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சில பல்கலைக் கழகங்களில் போட்டியாக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பிரசிடென்சி பல்கலையிலும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் டெல்லி பல்கலைக் கழகத்தில் ஆவணப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் டெல்லி பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றம ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக் கழகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டெல்லி போலீசார் பீம் ஆர்மி அமைப்பை சேர்ந்த மாணவர்களை கைது செய்தும் உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications