பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டி கிடையாது.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. ஐசிசிக்கு பறந்த கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் எழுதி , இனிமேல் ஐசிசி போட்டிகளுக்கு இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Terror Attack Jammu kashmir Pakistan

பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நமது இந்திய அரசு எடுத்து உள்ளது.

பிசிசிஐ அதிரடி முடிவு

இந்நிலையில், இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே கிடையாது என்று பிசிசிஐ அதிரடியாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "காஷ்மீர் தாக்குதலை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசு என்ன சொன்னாலும் அதைச் செய்வோம். அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை.

அதேபோல, இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஆனால் ஐசிசி போட்டிகள் வரும்போது ஐசிசி வலியுறுத்தல் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். ஐசிசிக்கும் இப்போது என்ன நடக்கிறது என்பது தெரியும்" எனக் கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்தியா - பாகிஸ்தான் அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருநாட்டுத் தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. கடைசியாக 2008ல் தான் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. 2012-13ல் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் பங்கேற்றது. அதன் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் நடக்கவில்லை.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா செல்லவில்லை. இந்தியா பங்கேற்ற போட்டிகள் மட்டுமே துபாயில் நடந்தன. இப்போது இருக்கும் இந்திய அணி வீரர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தான் மைதானங்களில் விளையாடியதே இல்லை.

ஐசிசி-க்கு கடிதம்

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் இரு அணிகளையும் ஒரே க்ரூப்பில் வைத்துப் போட்டிகளை நடத்தி வருகிறது ஐசிசி. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டியை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காணவே உலகளவில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம், இனிமேல் ஐசிசி தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி இருக்கும் க்ரூப்பில் இடம்பெறச் செய்ய வேண்டாம் என ஐசிசிக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமீரகம், ஓமன், ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன.இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் பிசிசிஐ முடிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+