நாடு முழுக்க திடீரென ஆஃப் செய்யப்படும் சிக்னல்கள்! மதிய நேரங்களில் நடக்கும் மர்மம்.. என்ன காரணம்
டெல்லி: இப்போது கோடைக்காலம் சுட்டெரிக்கும் நிலையில், நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் திடீரென சிக்னலை நிறுத்தி வைக்கிறார்களாம். ஏன் இதுபோல செய்கிறார்கள். வெப்பத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு.. சிக்னலை நிறுத்தி வைக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கோடைக்காலம் என்றாலே அக்னி நட்சத்திரம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டான். மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பகல் நேரத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள ஒரு வினோத முடிவு இப்போது இந்தியா முழுமைக்கும் பேசுபொருளாகியுள்ளது.

சிக்னலில் காத்திருக்க வேண்டாம்!
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வெயில் 42 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. சில இடங்களில் 45 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கிறது.. குறிப்பாக, நண்பகல் நேரங்களில் கான்கிரீட் சாலைகளில் இருந்து வெளிப்படும் வெப்பம் இருசக்கர வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் நிலைகுலையச் செய்கிறது. மக்களின் இந்த அவதியைக் குறைக்க, பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நகரின் முக்கிய டிராபிக் சிக்னல்கள் அனைத்தும் அணைக்கப்படுகின்றன. இதன் மூலம் சிக்னலில் ஒரு நிமிடம் கூட மக்கள் வெயிலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இந்த வினோத முயற்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை.
நீர்ச்சத்து குறைபாடு
வெயில் நம்மை நேரடியாகத் தாக்குவதால் மயக்கம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இந்த வெயிலில் நிற்கும்போது கடும் உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சிக்னல் இல்லை என்றால் கண்டபடி ஓட்டுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சிக்னல்கள் அணைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நிழலான பகுதிகளில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வெறும் டிராபிக் சிக்னல்களுடன் மட்டும் நின்றுவிடாமல், கோடை வெப்பத்தைத் தணிக்கப் பல்வேறு ஹீட் ஆக்ஷன் பிளான்களை நகரங்கள் கையில் எடுத்துள்ளன.
பல்வேறு மாற்றங்கள்
முதலில் பள்ளிகள் நேரம் மாற்றம்.. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மாணவர்களைக் காக்கப் பள்ளி நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.. மேலும், ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் மற்றும் குடிநீர் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. சில நகரங்களில் வாகன ஓட்டிகளுக்காகச் சிக்னல் பகுதிகளில் பிரம்மாண்டமான பசுமை வலைகள் கட்டப்பட்டு நிழல் வழங்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி வரை அதிகரித்து வருகின்றன. இது போன்ற சிறிய மாற்றங்கள், இந்த கடும் கோடையில் சாமானிய மக்களின் உயிரைக் காக்கும் ஒரு 'சர்வைவல் டூல்' என்றே சொல்லலாம். வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மக்களே உஷார்!
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications