''ஆந்தை அருகில் ஒரு அழகான பெண்ணின் முகம் இருக்கிறது''.. 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!
டெல்லி: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைக்கு அருகில் ஒரு அழகான பெண்ணின் முகம் மறைந்திருக்கிறது. அந்த பெண்ணின் முகத்தை 7 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் அதிக ஐக்யூ லெலவல் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
ஆப்டிகல் மாயை அல்லது ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் படங்களுக்கு எப்போது இணையத்தில் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
இது போன்ற படங்கள் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை இணையத்தில் அதிகம்பேர் விரும்பி பார்க்கின்றனர்.

ஆப்டிகல் மாயை
குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது அறிவுக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறனை ஓரளவுக்கு கணித்துவிடும் என்று சொல்லப்படுவதும் உண்டு. இதனால், இணையத்தில் இத்தகைய படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இல்யூஷன் படங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. புதிர்கள் ஒரு வகை என்றால், மேலோட்டமாக பார்த்தால் ஒன்று உற்று நோக்கி பார்த்தால் வேறு ஒன்றும் என நமது கண்களை குழப்பும் வகையிலான படங்களும் ஏராளமாக உள்ளன.

நட்பு வட்டங்களுக்கு..
இவ்வாறு இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் சமயத்தில் நமக்கு சவால் விடுக்கும் வகையில் இப்படங்கள் இருப்பதால் பலரும் இதை விரும்பி பார்த்து அதற்கு விடையை காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர். பலரும் தங்கள் நட்புகளுக்கு அனுப்பி அவர்களுக்கும் சவால் விடுக்கின்றனர். அந்த வகையில் இன்று இணையத்தில் பரவி வரும் ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு வெள்ளை நிறத்திலான இந்த படத்தில் சுற்றிலும் மரம் செடி கொடிகளும் புதர்களுமாக காணப்படுகின்றன.

7 செகண்ட் டைம்
ஆந்தை ஒன்று தனது சிறகுகளை விரித்து பறக்க தொடங்கிறது. இந்த படத்திற்குள் ஒரு அழகான பெண் முகம் ஒளிந்து இருக்கிறது. பெண்ணின் முகம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க்.. பெண்ணா அல்லது ஆந்தையா? என்ற பெயரில் இணையத்தில் மிகவும் பிரபலமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது உலா வருகிறது. 7 செகண்டில் பெண் உருவத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

பெண்ணின் முகம் தெரிகிறதா
நன்கு உற்று கவனியுங்கள்.. எளிதில் இந்த பெண்ணின் உருவத்தை கண்டுபிடித்து விடலாம்.. நாம் சற்று ரிலாக்சாக அந்த படத்தை பார்த்தாலே எளிதில் கண்டுபிடித்து விடலாம். சர் 7 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. பெண்ணின் முகம் போன்ற வடிவம் தெரிகிறதா... பெண்ணின் உருவத்தை இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் ஒரு டிப்ஸ் தர்றோம்...

இடது பக்கத்தில்..
இந்த வனப்பகுதியில் தென்படும் காட்சிகளை நன்கு உற்று பாருங்கள். மரங்களின் கிளைகளை ஒட்டி பெண்ணின் உருவம் மறைந்து இருக்கிறது. சரி.... இப்போதும் கண்டுபிடிக்கவில்லையா... நாங்களே அதற்கான விடையை சொல்லி விடுகிறோம். ஆந்தையின் இடது பக்கத்தை மரக்கிளையோடு சேர்த்து பாருங்கள்.. இப்போது ஒரு பெண்ணின் முகம் போன்ற ஒரு தோற்றம் உங்கள் கண்களுக்கு தென்படுகிறதா.. இதுதான் இல்யூஷன் படத்திற்கான விடையாகும். மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டும் காட்டப்பட்டுள்ளது. இணையத்தில் அதிகம் பகிரப்படும் இந்த படம் பலரையும் குழப்பி விட்டு டிரெண்ட் ஹிட் அடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications