5,000 ஆண்டுகளாக "பாரத்" ஒரு "மதச்சார்பற்ற" நாடு.. சொல்வது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
டெல்லி: பாரத் (பாரதம்) எனும் இந்த நாடு 5,000 ஆண்டுகளாக "மதச்சார்பற்ற நாடாக" திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" அல்லது "இண்டியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் "இந்தியா" என்ற பெயரை பயன்படுத்துவதையே பிரதமர் மோடி முதல் பெரும்பாலான பாஜக தலைவர்கள் தவிர்த்து வருகின்றனர். இப்போது "இந்தியா" என்ற பெயரே பாஜகவினரின் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

அத்துடன் நிற்காமல், "இந்தியா"வுக்கு பதில் "பாரத்" (பாரதம்) என்ற சொல்லையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி தொடங்கி அனைத்து மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் நாட்டின் பெயரையே "இந்தியா" என்பதற்கு பதில் "பாரத்" என மாற்றப் போகிறார்களோ? என்கிற அச்சமும் எழுந்தது. அதற்காகத்தான் திடீரென "நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்" கூட்டப்பட்டதா? என்கிற விவாதமும் நடந்தது. தற்போது "இந்தியா" "பாரத்" விவகாரம் கிடப்பில் கிடக்கிறது.

இதனிடையே டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த செயற்பாட்டாளர் ரங்கா ஹரி எழுதிய "'Prithvi Sookta - An Ode To Mother Earth" என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நமது தேசிய ஒற்றுமைக்கு நம்முடைய தாய்நாடு முதன்மையானது. இந்த பாரத் (பாரதம்) 5,000 ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஒரு நாடாக திகழ்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம். இதுதான் நமது உணர்வு. இதுதான் நமது தத்துவம்.

பாரதத்தில் பல்வேறு வேற்றுமைகள் உண்டு. ஆனால் நாம் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்கிற ஒற்றுமையைத்தான் உலகத்துக்கு ஒரு பாடமாக சொல்ல வேண்டும். இந்தியா இருக்கும் வரை இத்தகைய ஆன்ம உணர்வும் இருக்க வேண்டும். கடைசி மனிதனும் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக சன்னியாசிகள் இந்த பாரதத்தை உருவாக்கினர். உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் படைக்கப்பட்டது. அவர்கள் சன்னியாசிகள் மட்டுமல்ல. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் குற்ற பழங்குடிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்கள். இவ்வாறு மோகன் பகவத் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.

-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி!












Click it and Unblock the Notifications