Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bharat Bandh Live Updates: நெடுஞ்சாலைகளில் மறியல்-அதிர்ந்தது தலைநகர் டெல்லி- முடங்கியது போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த் போராட்டம் இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்கள், விவசாயத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க உதவும் என்பது விவசாயிகளின் எதிர்ப்புக்கு காரணம்.

இந்த 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல்வேறு கட்ட போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்- பாரத் பந்த் அறிவிக்கப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு பாரத் பந்த் போராட்டம் தொடங்கியது. பாரத் பந்த் போராட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் காணலாம்.

Bharat Bandh against Farml Laws- Live Updates in Tamil

Sep 27, 2021, 2:04 pm IST

கேரளாவில் கொட்டும் மழையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
Sep 27, 2021, 12:50 pm IST

கர்நாடகா: பெங்களூருவில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் போராட்டம்
Sep 27, 2021, 12:42 pm IST

திண்டுக்கல்லில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டம்
Sep 27, 2021, 12:41 pm IST

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்க நிர்வாகிகள் மறியல் போராட்டம் நடத்தினர்
Sep 27, 2021, 12:12 pm IST

மறியல் போராட்டம் எதிரொலி: குர்காம்-டெல்லி சாலையில் நத்தை போல ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
Sep 27, 2021, 11:45 am IST

விவசாயிகள் போராட்டம்...அதிர்ந்தது தலைநகர் டெல்லி...முடங்கியது போக்குவரத்து
Sep 27, 2021, 11:36 am IST

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மாறியல்
Sep 27, 2021, 11:31 am IST

தமிழகத்தில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம்- ரயில் சேவைகள் பாதிப்பு
Sep 27, 2021, 11:31 am IST

உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறையில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டம்
Sep 27, 2021, 11:18 am IST

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்..
Sep 27, 2021, 11:11 am IST

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
Sep 27, 2021, 11:11 am IST

ஈரோட்டில் திமுக, காங், இடதுசாரிகள் விவசாய சங்கத்தினர் மறியல்- 300 பேர் கைது
Sep 27, 2021, 11:11 am IST

ஈரோட்டில் திமுக, காங், இடதுசாரிகள் விவசாய சங்கத்தினர் மறியல்- 300 பேர் கைது
Sep 27, 2021, 11:09 am IST

சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அகிது. நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சியினர் மறியல்- 100 பேர் கைது
Sep 27, 2021, 10:49 am IST

சென்னை அண்ணா சாலையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சாலை மறியல் போராட்டம்- இடதுசாரி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு
Sep 27, 2021, 10:19 am IST

பஞ்சாப்: 350 சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் முடக்கம்
Sep 27, 2021, 10:19 am IST

ஆந்திரா: விஜயவாடாவில் இடதுசாரிகள் மறியல் போராட்டம்
Sep 27, 2021, 10:19 am IST

ஆந்திரா: விஜயவாடாவில் இடதுசாரிகள் மறியல் போராட்டம்
Sep 27, 2021, 10:19 am IST

தமிழகம்: மாநில எல்லையான ஒசூர் பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறப்பு- பேருந்துகள் இயக்கம்
Sep 27, 2021, 9:28 am IST

கேரளாவில் வெறிச்சோடின சாலைகள்- கடைகள் முழுமையாக அடைப்பு- பொது போக்குவரத்து அடியோடு முடக்கம்
Sep 27, 2021, 9:23 am IST

அரியலூரில் வேற்றுகிரகவாசிகள் போல் வேடமணிந்து விவசாயிகள் போராட்டம்
Sep 27, 2021, 9:23 am IST

அரியலூரில் வேற்றுகிரகவாசிகள் போல் வேடமணிந்து விவசாயிகள் போராட்டம்
Sep 27, 2021, 9:09 am IST

வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் மறியல் போராட்டம். டெல்லி- மீரட் பகுதியில் விவசாயிகள் சாலை மறியல். விவசாயிகள் சாலை மறியலால் ஸ்தம்பித்த சாம்பு எல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து காசியாபூர் வரை போக்குவரத்தை முடக்கிய விவசாயிகள்
Sep 27, 2021, 9:08 am IST

கர்நாடகாவில் விவசாய சங்கங்கள் போராட்டம்
Sep 27, 2021, 9:07 am IST

தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்- கடை அடைப்பு
Sep 27, 2021, 9:07 am IST

டெல்லி-ஹரியானா நெடுஞ்சாலையில் சிங்குர் எல்லையில்...
Sep 27, 2021, 8:24 am IST

தமிழகம்: கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் 5,000 கடைகள் மூடப்பட்டன
Sep 27, 2021, 8:03 am IST

காசிப்பூர் எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
Sep 27, 2021, 7:52 am IST

புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை
Sep 27, 2021, 7:45 am IST

டெல்லி-அமிர்தரசஸ் தேசிய நெடுஞ்சாலையை ஹரியானாவின் குருஷேத்திராவில் முடக்கிய விவசாயிகள்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+