'பாரத் பந்த்' நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள்அழைப்பு.. எந்த சேவைகள் பாதிக்கும்?
டெல்லி: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பல விவசாயிகள் சங்கங்களும், மத்திய தொழிற் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பால் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 'தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் இந்த போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தொடங்கினர்.

அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுக்க ஹரியானா - டெல்லி எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
முழு அடைப்பு: இந்த போராட்டம் இன்னும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லையில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராடம் அமைதியான முறையில் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பல்வேறு விவசாய அமைப்புகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சாலை மறியல்: சம்யுக்தா கிஷான் மோர்ச்சா உள்பட பல விவசாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொழிற்சங்கம் பங்கேற்கும்: இன்று நடைபெற உள்ள பாரத் பந்தில் அதிமுகவின் 17 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமலக்கண்ணன், மத்திய அரசைக் கண்டித்து ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்கமும் பங்கேற்கும். திமுகவுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை" எனக் குற்றம் சாட்டினார்.
எந்த சேவைகள் பாதிக்கும்?: விவசாயிகள் விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்து, விவசாய பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள், தனியார் அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வட இந்தியாவில் இந்த போராட்டம் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கும் என்பதால் அங்கு இந்த சேவைகள் எல்லாம் பாதிக்கப்பட அதிக வாயுப்புகள் உள்ளன.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications