பாஜக மூத்த தலைவர் LK அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது.. அறிவித்தார் பிரதமர் மோடி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. 96 வயதாகும் அத்வானி, துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு வழங்கப்பட உள்ளது. கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொலைபேசியில் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது.
அடிமட்டத்தில் இருந்து நமது நாட்டின் துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் எப்பொழுதும் அனைவருக்கும் முன்னுதாரணமானவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications