6 மாநில இடைத்தேர்தல் முடிவு! 7இல் 4 இடங்களை தட்டிய தூக்கிய பாஜக.. எதிர்க்கட்சிகளுக்கு ஷாக்
டெல்லி: நாட்டில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு காரணங்களால் காலியான 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த நவ.3ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.
இதனிடையே கடந்த 3ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வருகிறது.. 6 மாநிலங்களிலும் ஆளும் கட்சி வெல்ல பெரும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இடைத்தேர்தல்
குறிப்பாகப் பீகார் மற்றும் தெலுங்கானாவில் ஆளும் தரப்பு தனது கவுரவத்தை நிரூபிக்கவே இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு முன்பு, ஏழு இடங்களில், பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும், சிவசேனா மற்றும் ஆர்ஜேடி தலா ஒன்றை தங்கள் வசம் வைத்து இருந்தன. மாநில வாரியாக பீகாரில் இரண்டு இடங்கள் உள்ளன. உ.பி., ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவிலும் தலா ஒரு இடமாகும்.

பீகார்
பீகாரில் நிதிஷ் குமார் கட்சிக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு அழுத்தம் இருந்தது. பாஜக உடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடியு-இன் அனந்த் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இடைத்தேர்தலில் அவரது மனைவி நீலம் தேவி போட்டியிட்டார். இதில் நீலம் தேவி வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு தொகுதியான கோபால்கஞ்கை பாஜக தக்க வைத்துக் கொண்டது. சுமார் 20 ஆண்டுகளாக இது பாஜகவிடம் உள்ள தொகுதியாகும்.

ஹரியானா
ஹரியானாவில், முன்னாள் முதல்வர் பஜன்லாலின் குடும்பத் தொகுதியான அடம்பூரில் இடைத்தேர்தல் நடக்கிறது. பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் சமீபத்தில் தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சுமார் 68 ஆண்டுகளாக இந்த தொகுதி அவர்கள் கைகளில் தான் உள்ளது. பவ்யா பிஷ்னோய் இந்த இடைத்தேர்தலில் பெரியளவில் வெற்றி பெற்று உள்ளார்.

மகாராஷ்டிரா
அடுத்தகட்டமாக முக்கியமான மகாராஷ்டிரா. அங்கு சிவசேனா கட்சி இரு கோஷ்டிகளா பிரிந்த பின்பு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. சிவசேனா கட்சி சின்னம் முடக்கப்பட்டு இரு தரப்பிற்கும் வெவ்வேறு சின்னங்கள் தரப்பட்டு உள்ளன. இங்கு பாஜக மற்றும் சிவசேனா ஷிண்டே தரப்பு போட்டியிடவில்லை. இதனால் . சிவசேனா தாக்கரே தரப்பு எளிதாக வென்றது.

மற்ற தொகுதிகள்
இது தவிர தெலங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் பாஜக தனது கட்சியை வளர்க்க இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாக அக்கட்சியினர் பார்க்கின்றனர். இருப்பினும், இந்த இடைத்தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வென்றுள்ளது. அதேபோல ஒடிசாவில் ஆளும் பாஜக கிட்டதட்ட வெல்லும் தருவாயில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக வலுவாக உள்ள கோல கோகரநாத் தொகுதியில் மிக பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தததில் 7 தொகுதிகளில் 4இல் பாஜகவும் பிராந்தய கட்சிகள் மூன்றிலும் வென்று உள்ளன.












Click it and Unblock the Notifications