அடிதூள்.. வரப்போகும் 3 ஜாக்பாட் அறிவிப்புகள்.. அரசு ஊழியர்கள் ஏக குஷி.. மோடியின் மாஸ்டர்பிளான்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி அரியர்ஸ் தொகையை வழங்குவது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. மார்ச் 8ம் தேதிக்கு பின்பாக இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
2023ம் வருடம் கர்நாடகா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜாக்பாட் 1
2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாத அகவிலைப்படி இன்னும் வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த நிலுவை தொகை தொடர்ந்து தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. பல்வேறு காரணிகள், நிதி நிலைமை உள்ளிட்ட பல விஷயங்களால் இந்த தொகை வழங்கப்படவில்லை. லெவல் 3 ஊழியர்களுக்கு மட்டும் நிலுவை தொகை 18 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரை உள்ளது. லெவல் 13 ஊழியர்களுக்கு நிலுவை தொகை 1.40 லட்சம் முதல் 2.15 லட்சம் வரை உள்ளது. இதை கொடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

ஊழியர்கள் கோரிக்கை
இது தொடர்பாக ஊழியர்கள் சங்கங்களும் முக்கியமான கோரிக்கைகளை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி அரியர்ஸ் தொகையை வழங்குவது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகி தொடங்கி உள்ளன. மார்ச் 8ம் தேதிக்கு பின்பாக இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இந்த தொகை அளிக்கப்பட உள்ளது. அதேபோல் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஜாக்பாட் 2
தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவிகிதமாக உள்ளது. இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன. இது உயரும் பட்சத்தில் வருமானமும் தானாக உயரும். உதாரணமாக தற்போது 18 ஆயிரம் அடிப்படை சம்பளம் கொண்டவர்கள் இந்த ஃபிட்மென்ட் காரணி காரணமாக 46 ஆயிரம் வரை பெறுகிறார்கள். இதுவே ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு செய்யப்பட்டு 3.68 சதவிகிதம் ஆக்கப்பட்டால் மற்ற சம்பள உயர்வுகள், சலுகை உயர்வுகளுடன் சேர்த்து அவர்களின் வருமானம் 63 ஆயிரம் வரை உயரும். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு தொடர்பாக அறிவிப்பும் விரைவில் வரலாம் என்று கூறப்படுகிறது.

ஜாக்பாட் 3
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும்., சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதத்திற்கு பின் அகவிலைப்படி 3 சதவிகிதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications