இந்தியாவில் ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா- அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடம்
டெல்லி: இந்தியாவில் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. உலக நாடுகளில் ஒரே நாள் பாதிப்பில் அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 17,198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாள் பாதிப்பு
இதனையடுத்து ரஷ்யாவில் வியாழன்று ஒரே நாளில் 8,849 பேருக்கு கொரோனா உறுதியானது. 3-வதாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா உறுதியானது.

முதலிடத்தில் அமெரிக்கா
உலக நாடுகள் அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,09,921 ஆகும். அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 95,839 பேர் கொரோனாவால் மரணித்து போயுள்ளனர்.

அதிகரிக்கும் பாதிப்பு
கொரோனா பாதிப்பில் ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,17,554 ஆக அதிகரித்திருக்கிறது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளன. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,099 ஆக உள்ளது. கொரோனா மொத்த பாதிப்பில் தற்போது பிரேசில் 3-வது இடத்துக்கு வந்துள்ளது.

3-வது இடத்தில் பிரேசில்
பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,113 ஆக உள்ளது. பிரேசிலுக்கு அடுத்ததாக ஸ்பெயினில் 2,80,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் இங்கிலாந்து 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 36,042 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு என்பது 19,156 ஆக உள்ளது.

இந்தியாவுக்கு 11-வது இடம்
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-வது இடம். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,18,226 ஆகும். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,584. 10-வது இடத்தில் ஈரான் உள்ளது. ஈரானில் 1,29,341 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மொத்தம் 7,249 பேர் ஈரானில் கொரோனாவால் மாண்டு போயினர்.

அதிக பாதிப்பு மகாராஷ்டிராவில்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். மகாராஷ்டிராவில் 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,454 ஆகும். 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 13,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத் மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 773 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications