எதிர்க்கட்சிகள் முகத்தில் திகிலடித்த நிதிஷ்குமார்!”இந்தியா” அணியில் ஏகப்பட்ட பாஜக ஸ்லீப்பர் செல்கள்?
டெல்லி: பாஜக நிறுவனத் தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பீகார் முதல்வரும் "இந்தியா" கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை உருவாக்கியவர்களில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முக்கியமானவர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து "இந்தியா" கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். "இந்தியா" கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார் நிதிஷ்குமார்.

ஆனாலும் நிதிஷ்குமார், பாஜக கூட்டணிக்கே திரும்ப வந்துவிடுவார்; அப்படி வந்தாலும் அவருக்கு கதவுகளை ஒருபோதும் திறக்கவே மாட்டோம்; அவருக்கு அப்படி என்ன செல்வாக்கு இருக்கிறது? எங்க தயவில்தான் பீகார் சட்டசபை தேர்தலில் ஜெயித்தார்.. அவருக்கு என எந்த தனிப்பட்ட செல்வாக்குமே இல்லை என விளாசிக் கொண்டிருக்கிறது பாஜக.
இந்நிலையில் திடீரென டெல்லிக்கு வந்த நிதிஷ்குமார், பாஜகவின் நிறுவனத் தலைவரான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் குழுமி இருந்தனர். இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சித் தலைவர், வாஜ்பாய் நினைவிடத்துக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
#WATCH | Bihar CM Nitish Kumar pays tribute to former Prime Minister Atal Bihari Vajpayee on his death anniversary, at 'Atal Samadhi Sthal' in Delhi. pic.twitter.com/iYtcGhcYze
— ANI (@ANI) August 16, 2023
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இங்கே வருகை தந்தேன். வாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றியதை நான் எப்போது மறக்க முடியாது. பீகார் மாநில முதல்வராக நான் முதல் முறையாக பதவியேற்ற போது வாஜ்பாய் வருகை தந்திருந்தார் என்றார்.
"இந்தியா" கூட்டணியில் இருந்து ஏற்கனவே தேசியவாத காங்கிரஸை ஒட்டுமொத்தமாக கழற்றிவிடுவதற்காக சரத்பவாருடன் பல பேரங்களை பாஜக தரப்பு பேசி வருகிறது. "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டம் நடைபெறும் போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்குமோ என திகிலில் உறைந்து கிடக்கின்றனர் எதிர்க்கட்சி தலைவர்கள். இப்போது சரத்பவாரைத் தொடர்ந்து வாஜ்பாய் நினைவிடத்துக்குப் போய் "இந்தியா" கூட்டணிக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நிதிஷ்குமார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications