Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்ந்து கெட்ட ஜமீன் மாதிரி.. பீகாரில் மண்ணை கவ்விய காங்கிரஸ்! ‘இந்தியா’ கூட்டணியில் போர்க் குரல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் அந்தக் கட்சியின் நிலைமை மிக மோசமாகியுள்ளது. கூட்டணியை வழிநடத்தும் தகுதி காங்கிரசுக்கு இல்லை எனவும் பிராந்திய கட்சிகள் கூட்டணியை வழிநடத்த வேண்டும் என்ற குரல் எழத் துவங்கி இருக்கிறது. மேலும், ராகுல் சந்தித்த பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் அவருக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் பீகார் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. கடந்த 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆரம்பத்தில் இருந்து பாஜக - ஜேடியூ கூட்டணி வெற்றிவாகை சூட துவங்கியது. ஆளும் கட்சி பலம், நிதீஷ்குமாரின் நலத்திட்டங்கள், பாஜகவின் எழுச்சி அந்த கூட்டணியில் வெற்றிக்கு அடிநாதமாக அமைந்தது.

அதே நேரத்தில் அக்கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட ராஸ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் இணைந்த மகா கட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. 61 சட்டமன்ற தொகுதிகளை பிடிவாதமாக கேட்டு பெற்ற நிலையில் வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

Bihar INDIA Congress

பீகார் காங்கிரஸ் தோல்வி

மேலும் 8.7 சதவீதம் வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி அறுவடை செய்ய முடிந்தது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையேற்ற பின்பும், அதற்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கேவை தலைவர் எனச் சொன்னாலும் அவர்தான் கட்சியின் தலைவர் என்பது எதிர்கட்சிகளின் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பாதயாத்திரை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுத்தாலும், "SIR" குற்றச்சாட்டை வைத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் ராகுல் ஃபேக்டர் பீகார் தேர்தலில் எடுபடவில்லை.

இந்தியா கூட்டணி நெருக்கடி

இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வி, பிற இந்தியா கூட்டணி கட்சிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை தலைமையாக நின்று வழிநடத்தும் தகுதியை இழந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி தலைமையை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளது.

பாஜக எழுச்சி

பாஜகவின் வெற்றிகளை காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. பாஜகவை வீழ்த்தும் திறன் படைத்த கட்சி தான் கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்திய மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியை ஏற்கும் தலைமை ஏற்கும் தகுதி உள்ளவர் என பேசி இருக்கிறார் அக்கட்சியின் எம்பி ஆன கல்யாண் பானர்ஜி. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஆம் ஆத்மி, தற்போது கூட்டணியில் இருக்கும் சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் வாக்கு வீழ்ச்சி

அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழகம், அசாம், புதுச்சேரி, கேரளா என அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளது. அதற்குப் பிறகு அதாவது 2027-ல் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அங்கு பலமாக இருக்கும் பாஜகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி பலமாக இருக்க வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணியின் தலைமையில் இருந்து காங்கிரசை மாற்ற வேண்டும் என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் பரபரப்பான குரல்.

பிராந்திய கட்சிகள் அதிருப்தி

மேலும் காங்கிரஸ் கூட்டணி தேசிய கட்சியாக இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கூட்டணி அமைத்திருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதே சூழல் தான் பல மாநிலங்களில் நிலவுகிறது. மேலும் ராகுல் காந்திக்கும் கூட்டணியில் தலைவர் என்ற பெயரை தவிர அதனை வழிநடத்தும் தகுதி இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தலில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளை குறி வைத்து ராகுல் காந்தி அதிகார யாத்திரையும் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

மம்தா vs காங்கிரஸ்

ஆனால் அதில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சிகள் வெல்ல முடியவில்லை. இதனால் வரும் சட்டமன்ற தேர்தல்களில் இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பங்குக்கு பிராந்திய கட்சிகளிடம் உரிய தொகுதிகளை கேட்டுப் பெற முடியாத சூழல் உள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் கூட ஆறு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தனித்து போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, 5 தொகுதிகளில் வென்றுள்ளது. இதனால் இஸ்லாமிய வாக்காளர்களும் காங்கிரசை புறக்கணித்து விட்டதாகவே விமர்சிக்கப்படுகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் அந்த கட்சிக்கு நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+