தேஜஸ்வி காலை வாரிவிடும் காங்கிரஸ்.. சைலண்டாக அடிக்கும் பாஜக.. பீகார் தேர்தல் புதிய சர்வே
டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை ஜேடியு கூட்டணி, ஆர்ஜேடி கூட்டணி மற்றும் ஜான் சுராஜ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக ஜேவிசி என்ற அமைப்பு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். தொடர்ந்து அங்கு வரும் நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்காக அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஜேவிசி அமைப்பின் கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

பீகார் தேர்தல்
போட்டி கடுமையாக இருக்கும் என்ற போதிலும் என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 122 இடங்களில் வெல்ல வேண்டும்.
அங்கு பீகாரில் இந்த முறை என்டிஏ கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றும் என அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்தியா கூட்டணி கூட்டணி 93 முதல் 112 இடங்களைப் பெறும் என்று இந்த அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக முன்னிலை
அதில் என்டிஏ கூட்டணியில் பாஜக, ஜேடியு சம அளவு இடங்களில் போட்டியிட்டாலும் கூட பாஜக 70 முதல் 81 இடங்களில் வென்று சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.. மறுபுறம் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 42 முதல் 48 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர லோக் ஜனசக்தி கட்சி 5 முதல் 7 இடங்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 2 இடங்கள், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒன்று முதல் இரு இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை அதில் ஆர்ஜேடி கட்சி 69 முதல் 78 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 61 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 9 முதல் 17 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கம்யூனிஸ்ட் (ML) கட்சி 12 முதல் 14 இடங்கள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 முதல் 2 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் நிலை மோசம்
மாஜி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இருப்பினும், அக்கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மஜ்லீஸ், பிஎஸ்பி, மற்றும் பிற கட்சிகள் 8 முதல் 10 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல முதல்வர் பதவிக்குப் பொருத்தமான நபர் யார் என்பது குறித்த கேள்விக்குத் தேஜஸ்வி யாதவ் 33% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். நிதிஷ் குமார் 29% ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.. சிராஜ் பஸ்வான் மற்றும் பிரசாந்த் கிஷோர் தலா 10% ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இப்போது பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு வெறும் 9% ஆதரவு மட்டுமே இருக்கிறது. பாஜகவில் இருந்து வேறு யாரேனும் முதல்வராக வர வேண்டும் என 4% பேர் செல்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இருந்து யாரேனும் ஒருவர் வர வேண்டும் என 5% பேர் சொல்கிறார்கள்.
கடும் போட்டி
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, என்டிஏ கூட்டணிக்கு 41% முதல் 43% வரை வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மறுபுறம் இந்தியா கூட்டணி 39% முதல் 41% வரை வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது. அதாவது போட்டி மிகக் கடுமையாக இருக்கும் ஓரிரு சதவிகித வாக்குகளை வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜான் சுராஜ் கட்சி 6% முதல் 7% வாக்குகளைப் பெறும் என்றும் மற்ற சிறிய கட்சிகள் 10% முதல் 11% வரை வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications