இளைஞர்கள் ஓட்டுக்களை காந்தம்போல இழுத்த தேஜஸ்வி.. பீகாரில் மாறிய டிரெண்ட்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
டெல்லி: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெறும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.
Recommended Video
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும் என்று எக்சிட் போல்கள் வரும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு டிரெண்ட் மாறிப்போய் விட்டதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்லலாம். அந்த இரண்டு காரணங்களையும் இந்தியா டுடே ஆக்சிஸ் போல் எக்சிட் போல் முடிவுகள் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

தேஜஸ்வி யாதவுக்கு இளைஞர்கள் சப்போர்ட்
அதில் ஒரு விஷயம் பீஹாரில் கணிசமாக உள்ள இளம் வாக்காளர்கள் மோடி அல்லது நிதிஷ்குமார் பக்கம் செல்வதை விடவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பக்கம்தான் மொத்தமாக சாய்ந்து உள்ளனர். அவரது பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவுக்கு இளைஞர்கள் வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது பாஜக அதை கிண்டல் செய்தது. ஆனால் எக்ஸிட் போல் முடிவுகளில் இந்தியா டுடே அதையே சொல்கிறது.

முதல் முறை ஓட்டுப் போடுவோர்
இந்த கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள இந்த சுவாரஸ்ய தகவல்களை பாருங்கள்: 18 முதல் 25 வயதுக்குட்பட்ட.. அதாவது பெரும்பாலும் முதல் முறை வாக்களிக்க கூடிய இளைஞர்கள் 47% பேர் மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பேர். ஆனால், பாஜக கூட்டணிக்கு இந்த வயது பிரிவில் உள்ளவர்களில், 34% பேர் ஓட்டு போட்டுள்ளனர். சிராக் பாஸ்வான் கட்சியான லோக் ஜனசக்திக்கு, 8 சதவீதம் ஓட்டுக்கள் போயுள்ளன.

சிராக் பாஸ்வானுக்கும் கணிசமான ஓட்டுக்கள்
26 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாக்குகளில் 47% எதிர்கட்சியின் கூட்டணிக்கு தான் சென்றுள்ளது. 36% பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். லோக் ஜனசக்தி கட்சிக்கு 7 சதவீதம் ஓட்டுக்கள் போயுள்ளன. பிற கட்சிகளுக்கு 3 சதவீதம் ஓட்டு போயுள்ளது.

வயதானவர்கள் பாஜகவுக்கு ஆதரவு
நடுத்தர வயதினர் வாக்குகளைத் தான் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி கணிசமாக பெற்றுள்ளது. 36 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் 42% பேர் அந்த கூட்டணிக்கு ஓட்டு போட்டனர். 41% பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். பாஸ்வான் கட்சிக்கு 7 சதவீதம் ஓட்டுக்கள் போயுள்ளன. 51 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 45 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கும், 40 சதவீதம் பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கும், 6 சதவீதம் பேர் பாஸ்வான் கட்சிக்கும் ஓட்டுப் போட்டுள்ளனர்.
|
வயது வித்தியாசம்
60 வயதுக்கு மேற்பட்டோர் 48% பேர் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். அதாவது இளைஞர்களில் பாதிக்குப் பாதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கும், முதியவர்களில் பாதிக்குப் பாதி ஓட்டுக்கள் பாஜக கூட்டணிக்கும் சென்றுள்ளன என்பது இதில் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. நீண்ட காலத்துக்கு இது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கலாம். முதலீடாக பார்க்கலாம்.

டிரெண்ட்டை மாற்றிய தேஜஸ்வி யாதவ்
ஏனெனில், வருங்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. அந்தவகையில் இந்த ஓட்டுக்களை தேஜஸ்வி யாதவ் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். நிதிஷ் குமாருக்கு வயதாகிவிட்டது, அவர் சோர்வடைந்து விட்டார், ஆட்சியை என்னிடம் கொடுங்கள் என்று இளைஞர்களின் முகமாக தேஜஸ்வி யாதவ் செய்த பிரச்சாரம் எடுபட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய இரண்டு பிரச்சினைகளும்தான் தேர்தல் களத்தில் பெரிதும் எதிரொலித்துள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மீது இயல்பாகவே மக்களுக்கு அதிருப்தி இருந்துள்ளதை இது தெளிவாக காட்டுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications