‘அப்பவே சொன்னேன்.. கடவுள் தண்டனை வழங்கிவிட்டார்’.. வினேஷ் போகத்தை சாடிய பிரிஜ் பூஷண்
டெல்லி: மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், காங்கிரஸ் தூண்டுதலில் நடந்த நாடகம் அது. இதற்கு கடவுளே தண்டனை வழங்கிவிட்டார் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. உடல் எடை அதிகரித்ததால், அவர் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு மொத்த நாடும் அதிருப்தியும், சோகத்தையும் தெரிவித்து வினேஷ்க்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அப்போது முதலே பாஜக ஆதரவாளர்கள் வினேஷை சீண்டிக் கொண்டிருந்தனர்.

பாஜக மூத்தத் தலைவரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை புகார் வைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தேசியளவில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்தப் போராட்டத்தை மனதில் வைத்து, பாஜகவினர் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை விமர்சித்து வந்தனர்.
அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் நட்சத்திர மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியா, அகில இந்திய கிசான் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல வினேஷ் போகத், ஜூலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். இதுகுறித்து அவர், "2023 ஜனவரி மாதம் மல்யுத்த வீரர்களின் முதல் நாள் போராட்டத்தின்போதே, இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று நான் சொல்லியிருந்தேன்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பூபிந்தர் ஹூடா, அவரின் மகன் தீபேந்தர் ஹூடா ஆகியோரின் தூண்டுதலில் தான் போராட்டம் நடந்தது. அது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அது போராட்டமே இல்லை. அது ஒரு நாடகம். அதை பின்னால் இருந்து காங்கிரஸ் இயக்கியுள்ளது.
இவர்களால் ஹரியானா மண்ணின் வீராங்கனைகள் சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். இதற்கு நான் பொறுப்பல்ல. அவர்கள்தான் பொறுப்பு. அரசியல் செய்வதற்காக தான் போராட்டம் நடத்தினர். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற கற்பனையில் இருக்கிறார்கள். அவர்கள் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெற முடியாது. பாஜகவின் சிறிய வேட்பாளர்களே அவர்களை தோற்கடித்து விடுவார்கள்.
ஆசிய விளையாட்டில் எந்த சோதனையும் இல்லாமல் பஜ்ரங் புனியா பங்கேற்றார். ஒரு மல்யுத்த வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனை செய்ய முடியுமா என்று வினேஷ் போகத்தை கேட்க விரும்புகிறேன். எடை கூடிய பிறகு ஐந்து மணி நேரத்துக்கு சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா. நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி தான் அங்கு சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்கான வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றீர்கள். அதற்கான தண்டனையும் கடவுள் உங்களுக்கு வழங்கிவிட்டார்." என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications