பிரியங்கா காந்தி அரசியல் வருகை.. ராகுல் காந்தி தோல்வியை காங். ஒப்புக்கொண்டுவிட்டது.. பாஜக தாக்கு
Recommended Video

டெல்லி: பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
உத்தரபிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி, நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ராகுல் காந்தி தோற்றுவிட்டதை காங்கிரஸ் வெளிப்படையாக இன்று அறிவித்துள்ளது. ராகுல் காந்தி தோல்வியடைந்ததை அறிவித்த காங்கிரசுக்கு நான் வாழ்த்து சொல்கிறேன்.

காங்கிரஸ் எப்போதுமே வாரிசு அரசியல் நடத்தும் கட்சி. ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே மனதில் நிறுத்தி செயல்படுவது வாடிக்கை. காங்கிரஸ் குடும்பத்தைதான், கட்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜகவோ, கட்சியைதான், ஒரு குடும்பமாக நினைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications