‛‛கையில் 7 கிலோ தங்கம்’’.. நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு தெரியுமா? தலையே சுத்துதே
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் மீது 8 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, அவருடைய சொத்து மதிப்பும் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மே 20ம் தேதி பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிஷா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும், பாஜகவின் மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரணாவத்தின் சொத்து மதிப்புகள் மற்றும் அவர் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் ரனாவத் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவருடைய சொத்து விவரங்கள், அவர் மீதுள்ள வழக்கின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
பாஜக வேட்பாளரானார் நடிகை கங்கனா ரனாவத்.. மண்டி தொகுதியில் வெல்வாரா? களநிலவரம் என்ன தெரியுமா?
அதாவது இவர் 50 எல்ஐசி பாலிசிகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.4.9 கோடியாகும். இவை அனைத்தும் 2008ல் வாங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ரூ.28.73 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள், ரூ.5.48 கோடி மதிப்பில் மூன்று உயர் ரக கார்கள், ரூ.53,000 மதிப்புள்ள ஒரு வெஸ்பா ஸ்கூட்டர், ரூ.8.5 கோடி மதிப்பில் 6.7 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி மற்றும் 14 காரட் வைரங்கள் என இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு ரூ.91.6 கோடியாக இருக்கிறது.
கிரிமினல் வழக்குகளை பொறுத்த அளவில், 4 அவதூறு வழக்குகள், மத உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பான 2 வழக்குகள், மத பகை மற்றும் பதிப்புரிமை மீறல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றைத் தூண்டியதற்காக தலா ஒரு வழக்கு உட்பட, தன்மீது எதிரான எட்டு கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கங்கனா ரணாவத் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயிப்போமா? கலக்கத்தில் கங்கனா ரனாவத்? காங்கிரஸ் வேட்பாளர பாருங்க.. யார் இந்த விக்ரமாதித்ய சிங்?
நடிகை என்பதை தாண்டி தொழிலதிபராகவும் ரனாவத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவருடைய பெயரில் ரனாவத் மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மணிகர்னிகா ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது, ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள பங்குகளையும் வைத்திருக்கிறார்.
ரனாவத்திற்கு என இரண்டு வீடுகள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒரு பிளாட்டும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு வீடும் இருக்கிறது. இது இரண்டின் மதிப்பு ரூ.31.5 கோடியாக இருக்கிறது.
இவர் போட்டியிடும் மண்டி தொகுதிக்கு ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் கடந்த 2014-2021 வரை பாஜகவின் ராம் ஸ்வரூப் ஷர்மா என்பவர்தான் எம்பியாக இருந்தார். 2021ல் அவரது மறைக்கு பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் சிங் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications