பாஜக வேட்பாளரானார் நடிகை கங்கனா ரனாவத்.. மண்டி தொகுதியில் வெல்வாரா? களநிலவரம் என்ன தெரியுமா?
டெல்லி: பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அந்த தொகுதியில் கங்கனா ரானாவத் வெல்வாரா? தற்போது அந்த தொகுதி யார் வசம் உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் மொத்தம் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பாஜக வேட்பாளர் பட்டியலில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அங்கு கங்கனா ரனாவத் வெல்வாரா? அந்த தொகுதி நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது இமாச்சல பிரதேசம் என்பது சிறிய மாநிலமாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 4 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மண்டி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் கடந்த 2004, 2009, 2013ல் காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங், பிரதீபா சிங் வெற்றி பெற்றனர். அதன்பிறகு 2014, 2019ல் இந்த தொகுதி பாஜக வசமானது. பாஜக சார்பில் ராம் ஸ்வரூப் சர்மா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2021ல் இறந்தார். தூக்கில் தொங்கிய நிலையில் டெல்லி இல்லத்தில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் மண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரதீபா சிங் வெற்றி பெற்றார். இவர் மறைந்த ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி ஆவார். வரும் தேர்தலிலும் பிரதீபா சிங் தான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் கங்கனா ரனாவத் VS பிரதீபா சிங் இடையே கடும் போட்டி நிலவலாம்.
கங்கனா ரனாவத், ராகுலின் சித்தி மேனகா காந்தி போட்டி.. வெளியானது பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல்
மேலும் ஒரு காலத்தில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது தொகுதியில் பாஜகவின் செல்வாக்கு என்பது அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2014 ல் இந்த தொகுதியில் பாஜகவின் ராம் ஸ்வரூப் சர்மா 39,856 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2019ல் 4 லட்சத்து 5 ஆயிரத்து 459 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் காலமான நிலையில் 2021ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதீபா சிங் வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக தான் இருந்தது.
அதாவது கடந்த 2021 இடைத்தேர்தலில் காங்கிரஸின் பிரதீபா சிங் 3 லட்சத்து 65 ஆயிரத்து 650 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் பிரிகாடிர் குஷால் தாகூர் 3 லட்சத்து 56 ஆயிரத்து 884 வாக்குகள் பெற்று வெறும் 8,766 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். இத்தகைய சூழலில் தான் கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிகையாக இருப்பதோடு, மண்டி என்பது அவர் பிறந்த மண்ணாகும். இதனால் அவர் எளிதில் வெற்றி பெறலாம் என பாஜக மேலிடம் கணக்கீட்டு கங்கனா ரனாவத்துக்கு சீட் வழங்கி உள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications