மோடி, அமித்ஷாவுக்கு கடும் அதிர்ச்சி.. பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் பவன் சிங் திடீர் விலகல்!
டெல்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த போஜ்புரி நடிகர் பவன் சிங் திடீரென தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு பவன் சிங் கடிதம் அனுப்பியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. மொத்தம் 195 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பிரதமர் மோடி வாரணாசியிலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா காந்தி நகரிலும் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர்களில் போஜ்பூரி நடிகர் பவன் சிங்கும் ஒருவர். மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக நடிகர் பவன் சிங் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹா களமிறங்குவார் என்பதால் நாடறிந்த நட்சத்திர தொகுதியாக மாறியது அசன் சோல்.
இந்த நிலையில் இன்று தமது சமூக வலைதளப் பக்கங்களில் நடிகர் பவன் சிங், தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பாஜகவினரை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் அண்மையில் விடிய விடிய நடைபெற்றது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்படி அலசி ஆராய்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் பவன் சிங் திடீரென தேர்தலிலேயே போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவாகும்.
பெண்கள் குறித்து நடிகர் பவன் சிங் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தன. தற்போது பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இது பாஜகவுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து தாம் லோக்சபா தேர்தலிலேயே போட்டியிடவில்லை என தப்பி ஓடிவிட்டார் பவன் சிங் எனவும் கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications