பாஜக வேட்பாளரை புரட்டி எடுத்த.. திரிணாமுல் தொண்டர்கள்! மேற்கு வங்கத்தில் உச்சக்கட்ட பதற்றம்!
டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாக தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமார்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் தாக்கப்பட்டிருக்கிறார்.

தெறிக்கவிட்ட திரிணாமுல்
குமார்கஞ்ச் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், பாஜக ஏஜென்ட்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் சுவேந்து சர்க்காருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் புகாரை விசாரிக்கத் தனது பாதுகாவலருடன் அவர் அந்த இடத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு கற்களாலும், கட்டைகளாலும் தாக்கத் தொடங்கியது.
தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர், உயிருக்கு பயந்து தனது பாதுகாவலருடன் தெறித்து ஓடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. "திரிணாமுல் காங்கிரஸ் பயந்துவிட்டது, அதனால்தான் என்னைச் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பூத் கேப்சரிங்
மேலும் அவர் கூறியதாவது, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளில் பாஜக முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். தான் தலையிட்டு மீண்டும் அவர்களை உள்ளே அனுப்பியதால் ஆத்திரமடைந்த கும்பல் தன்னைத் தாக்கியது. இந்த விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றனர். பாதுகாப்பு படையினர் போதுமான அளவில் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் ஆணையம்
இந்தச் சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. காயமடைந்த பாஜக ஏஜென்ட் பிஸ்வஜித் மண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லவ்பூர் மற்றும் குமார்கஞ்ச் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஹுமாயூன் கபீர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்திருந்தது. இன்று காலை வரை இரு தரப்பினர் சண்டையிட்டு வந்தனர்.
VIDEO | West Bengal election: BJP candidate from South Dinajpur manhandled allegedly by TMC workers even as a security person tries to protect him. #AssemblyPollsWithPTI #WestBengalPollsWithPTI
— Press Trust of India (@PTI_News) April 23, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/NeCAxYA08p
மோதல் சூழல்
நேற்று முர்ஷிதாபாத்தில் சிவநகர் ஆரம்பப் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நபர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹுமாயூன் கபீர் (AUJP நிறுவனர்) கட்சியினர் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதல் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இப்படி தேர்தல் நடக்கும் நேரத்தில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டிருப்பதால், மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications