இடைத் தேர்தல்.. காங். கோட்டையை தவிடு பொடியாக்கிய பாஜக.. 41 தொகுதிகளில் 31ல் அபார வெற்றி!
டெல்லி: இந்தியாவில் நிகழ்ந்த 11 மாநில இடைத்தேர்தல்களில் 7 மாநிலங்களில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த 41 தொகுதிகளில் 31 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும்.
மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, நாகாலாந்து, ஒடிஸா, தெலுங்கானா, குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தன.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தல்களில் 7 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களில் மொத்தம் இருந்த 59 இடங்களில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சியோ 41 இடங்களை வென்றுள்ளன.
இதில் 31 தொகுதிகள் காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. அதிலும் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் 26 தொகுதிகளை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியுள்ளன.
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் 28 தொகுதிகளில் 19 தொகுதிகளை பாஜகவும் 9 தொகுதிகளை காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன. அது போல் குஜராத்தில் 8 தொகுதிகளில் மொத்த தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக 6 தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியையும் பிடித்தது. மணிப்பூரில் 5 இடங்களில் 4 இடங்களை பாஜக பிடித்துள்ளது. மற்றொரு தொகுதியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றியுள்ளார்.
எனவே இந்த முறை இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி அடிவாங்கியுள்ளது , அவரது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications