குடியரசுத் தலைவர் தேர்தல்.. திட்டத்தை தொடங்கிய பாஜக.. 14 பேர் கொண்ட குழு அமைப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தேசிய செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 14 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தேவையான வாக்குகள் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இதற்கிடையே அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கி உள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மலிகார்ஜுனா கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யவுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் யார் வேட்பாளர் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக தரப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப் போவதாக கூறப்பட்டது. அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் தொடர்பான 14 பேர் கொண்ட குழு பாஜக அமைத்துள்ளது. அதில் மத்திய அமைச்சர்களும், தேசிய செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செயல்படவுள்ளார். அதேபோல் அஸ்வினி வைணவ், கிஷன் ரெட்டி, பாரதி பவார் உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 14 பேர் கொண்ட குழு, நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில், யார் வேட்பாளர் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், ஜூன் 26ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications