"9 மாநில அரசை கவிழ்த்துள்ளனர்! ஆனா மணிப்பூரை கவனிக்கல.." பாயிண்ட் பாயிண்டாக விளாசிய சுப்ரியா சுலே
டெல்லி: மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் எம்பி சுப்ரியா சுலே, பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை உச்சத்தில் இருக்கிறது. இந்த 3 மாதங்களாகவே அங்கு மிக மோசமான வன்முறை, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

மணிப்பூர் வன்முறை தடுக்க அம்மாநில பாஜக அரசு தவறிவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்த "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் மணிப்பூரில் இன்னுமே முழுமையாக அமைதி திரும்பவில்லை என்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: இதற்கிடையே மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கிடையே இந்த தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்த நிலையில், முதலில் இந்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பேசவில்லை. அவருக்குப் பதிலாகக் காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகாய் இந்த தீர்மானம் குறித்து முதலில் பேசினார்.
அதன் பிறகு பல்வேறு எம்பிக்களும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துப் பேசினார். இதில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, "மணிப்பூர் விவகாரத்தைப் பொறுத்தவரை.. இது அவர்களுக்கும் (மத்திய அரசுக்கும்) எங்களுக்கும் (எதிர்க்கட்சிகள்) இடையே நடக்கும் விஷயம் இல்லை. இது பெண்களின் கண்ணியம் தொடர்பானது.. இப்படிப்பட்ட ஆட்சியை எப்படித் தொடர அனுமதிக்க முடியும்.. மணிப்பூர் மாநிலத்தினது முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
வழக்குகள்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை, கொலை, பலாத்காரம் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. நாம் இந்த அளவுக்கே உணர்ச்சியே இல்லாத நபர்களாக மாறிவிட்டோமா! இதுதான் இந்த அரசின் பிரச்சனை... அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
நாங்கள் (இந்தியா கூட்டணி எம்பிக்கள்) ஒரு இந்தியக் குடிமகனின் பிரதிநிதிகள். ஒரு எம்பி என்பவர் குடிமக்களின் குரலாகவே இருக்கிறார்.. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடுதான்.. ஒரு பிரச்சினையைக் கையாள்வதில் இந்த அரசின் அணுகுமுறை அபத்தமானது. அவர்கள் ஒவ்வொரு முறையும், எதிர்காலம் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். நிகழ் காலத்தில் நடக்கும் வன்முறை குறித்துப் பேசுவதில்லை.
9 அரசுகள் கவிழ்பு: ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு நல்ல நாள் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது அந்த நல்ல நாள் எங்கே போனது. மணிப்பூரில் என்ன ஆனது. இது மட்டுமா நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் உச்சம் தொட்டுள்ளது. இதுதான் நீங்கள் கூறிய நல்ல நாளா.. இதுதான் பொதுமக்களுக்கு நீங்கள் தரும் நல்ல செய்தியா" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாநில அரசுகளைக் கவிழ்ந்துள்ளதாகக் கூறி அந்த மாநிலங்களையும் சுலே பட்டியலிட்டார். அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிராவில் இரண்டு முறை எனப் பல இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக கவிழ்த்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications