அண்ணாமலை “வார்னிங்”.. கேட்பாரா மோடி? தொடருமா அதிமுக கூட்டணி? 2024 தேர்தல் குறித்து நவம்பரில் ஆலோசனை
பாஜக கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைக்க தேசிய தலைமை முடிவு செய்து இருக்கிறது.
டெல்லி: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெறும் கட்சிகள் குறித்து நவம்பர் மாதம் அக்கட்சித் தலைமை ஆலோசனை நடத்த இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அறிவித்த நிலையில் அவரது இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்று இந்த ஆண்டுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் அரசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

காங்கிரஸ் கூட்டணி
எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, சமாஜ்வாடி, பி.ஆர்.எஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்து வாக்குகளை சிதறவிடாமல் ஆட்சியமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது.

பாஜக கூட்டணி
அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை இழந்து இருக்கிறது. மீதம் உள்ள கட்சிகளையும், எந்த கூட்டணியிலும் இல்லாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்பில் உள்ளது.

அதிமுக கூட்டணி
அத்துடன் முன்பு கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தக்க வைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

அண்ணாமலை எச்சரிக்கை
இந்த நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார் அண்ணாமலை. இந்த நிலையில் பாஜக கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைக்க முடிவு செய்து இருக்கிறது.

மோடியுடன் ஆலோசனை
இந்த குழு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு தொகுதி பங்கீட்டை இறுதி செய்த பிறகு, வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசித்து இறுதி முடிவை வெளியிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications