“சீக்கிரம் முடிக்கணும்”.. 2024 தேர்தலில் அதிக “சீட்”.. அமித் ஷா - எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன?
டெல்லி : டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டீமோடு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்த நிலையில், தொகுதி பங்கீட்டு குழப்பங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்யவேண்டும் என அமித் ஷா, நட்டா ஆகியோர் ஈபிஎஸ்ஸிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க - பாஜக கூட்டணியில் லேசான விரிசல் ஏற்பட்டது. மாற்றி மாற்றி இரு தரப்பும் விமர்சித்ததால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஒரு பேட்டியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அதனை ஆமோதித்தார். இதனால், இந்த விவகாரத்தில் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்தது. ஈபிஎஸ் தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்பதும் உறுதியானது. இதனால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அடுத்தகட்டமாக கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
பச்சைக்கொடி : இதற்கிடையே கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் தனித்து களம் இறங்கிய அதிமுக, பின்னர் கூட்டணி கட்சியான பாஜகவின் வேண்டுகோளை ஏற்று தனது வேட்பாளரை திரும்பப் பெற்றது. இந்நிலையில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டார் எடப்பாடி பழனிசாமி. கர்நாடகா தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் அமித் ஷா பச்சைக்கொடி காட்டினார்.
அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கேபி முனுசாமி, ஹெக்குமார் ஆகியோர் சென்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட டெல்லி பயணம் இது என்பதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன.
அதிமுக - பாஜக கூட்டணி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கிருஷ்ணமேனன் ரோடு இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இரவு 9 மணிக்கு பிறகு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின்போது பாஜக - அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக, நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விரிவாக ஆலோசித்துள்ளதாகத் தெரிகிறது.
தொகுதி பங்கீடு : இந்த சந்திப்பின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு குழப்பங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்தால், தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என அமித் ஷா, நட்டா ஆகியோர் கூறியதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூடுதலாக தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும் என விவாதித்ததாகவும் தெரிகிறது. அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கிடையே இன்று மேலும் சில பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications