"கைவிரித்த மத்திய அரசு.. இந்துக்களின் புனித தலமான கைலாச மலையை கூட காப்பாற்றல.." பாயும் சு வெங்கடேசன்
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்துக்களின் புனித பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என சொல்லி அமளியில் ஈடுபட்டனர். நேற்றைய தினமே ராகுல் காந்தி சீன விவகாரம் குறித்து பேச முயன்றார். இருப்பினும், அவரை பேச அனுமதிக்கவில்லை.

சஸ்பெண்ட்
இன்றைய தினம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்தே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் மற்றும் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சு. வெங்கடேசன்
இதற்கிடையே டெல்லியில் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சீன எல்லை விவகாரம் தொடர்பாகப் பேசிய சு. வெங்கடேசன், இந்துக்களின் புனிதப் பூமியையே பாஜகவால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கைலாய மாலையைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில் தான் பாஜக இருக்கிறது என்றும் சாடினார். மேலும், குறைந்தபட்சம் அங்கு என்ன நடந்தது என்பதை விவாதிக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு வெங்கடேசன், "இன்றைய தினம் போராட்டத்தில் இந்தியா கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தே போராடினார்கள். அதில் எங்கள் 8 எட்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். நாளையும் நிச்சயம் வரிசையாக இடைநீக்கம் நடக்கும். எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதிக்க கூடாது என்று ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.. மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டதை போல கைலாச மலையில் சீன ராணுவம் மேலேறி வந்தது.
கைலாச மலை
கைலாஷ் என்பது இந்து மரபில் எவ்வளவு முக்கியமான இடம் என்பது அனைவருக்கும் தெரியும் தெரியும். அந்த மலையின் மீது மேலே இன்னொரு நாட்டு ராணுவம் மேலே ஏறி வந்தபோது தடுக்க முடியாமல் இருந்தவர்கள் தான் இவர்கள். ஆன்மீகத்தையே அரசியலாக வைத்திருக்கும் நீங்கள், புனித பூமியாக கருதப்படும் ஒரு கைலாச மலையிலேயே சீன ராணுவம் வந்ததை தடுக்காமல் இருந்துள்ளீர்கள்.
கைவிரித்த மத்திய அரசு
சுமார் 2 மணி நேரம் மௌனம் சாதித்து, அதற்கு பிறகு என்ன முடிவோ நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்துள்ளீர்கள். அது பற்றி ஒரு ராணுவ ஜெனரல் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை நீங்கள் பரிசீலனை பண்ணுங்கள்.. உண்மையா என்று சொல்லுங்கள். ஆனால், அதை பற்றிய விவாதிக்கும் உரிமை அதில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய உரிமை லோக்சபாவுக்கு இருக்கிறது.
இப்படி நடக்கவே இல்லை என்று கூட நீங்கள் சொல்லுங்க. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த தான் நாடாளுமன்றம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே நாடாளுமன்றம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து குரல் கொடுத்துள்ளோம்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications