நாட்டுக்காக குடும்பத்தையே விட்டு வந்த மோடியை ‘இந்து’ இல்லை என விமர்சிப்பதா? லாலு மீது பாஜக பாய்ச்சல்!
டெல்லி: பிரதமர் மோடி ஒரு இந்துவே அல்ல; தாய் இறந்த போது தலையை மொட்டையடிக்காதவர்தான் மோடி என பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு "இந்தியா" கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நடத்திய ஜன் விஸ்வாஸ் யாத்திரை நிறைவு விழாவை ஒட்டி இப்பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிக பிரம்மாண்ட பொதுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், மோடிக்கு ஒரு நல்ல குடும்பமே கிடையாது. எனக்கு நல்ல குடும்பமே இருக்கிறது. என் மகள் ரோஷினிதான் எனக்கு சிறுநீரக தானம் கொடுத்தார். மோடி முதலில் இந்துவே இல்லை. அவர் தாய் இறந்த போது மொட்டை அடித்தாரா? அப்படி மொட்டை அடிக்காதவர் எப்படி இந்துவாக இருக்க முடியும்? என சாடியிருந்தார்.
லாலு பிரசாத் யாதவின் இந்த கடுமையாக விமர்சனம் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் மோடி குடும்பம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர் பாஜகவினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி தமது குடும்பத்தை தேச சேவைக்காக ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர். பிரதமர் மோடிக்கு பின்னால் இந்திய தேசத்தின் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் பிரதமரான உடன் மோடி தீபாவளி கொண்டாடியதே தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன்தான். மோடி தமது குடும்பத்தினருக்கு நேரம் செலவிடுவது இல்லை என்கின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications