"24 vs 30.." எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக பாஜக போடும் பிளான்! இதை யாரும் எதிர்பார்க்கலையே
டெல்லி: எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கும் நிலையில், இதற்கு போட்டியாக பாஜக மெகா கூட்டத்தை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான கூட்டணியை அமைக்கும் பணிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டது. அனைத்து எதிர்க்கட்சியும் ஒரே அணியில் இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே திட்டமாகும்.
இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் புனேவில் நடைபெற்றது. இதற்கிடையே அடுத்தகட்ட கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கட்சிகள் ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த மாதம் அஜித் பவார் தலைமையிலான சிவசேனா கட்சியும் அதில் இணைந்தது. அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தேசியளவில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரளும் முயற்சிக்கு இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் சரத் பவார் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்.
இன்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் என்சிபி தலைவர் சரத் பவார் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 82 வயதான சரத் பவார், கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும், இன்றைய தினம் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
சரத் பவார்: அதேநேரம் சரத் பவாருக்கு பதிலாக என்சிபி சார்பில் சமீபத்தில் என்சிபியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மகள் சுப்ரியா சுலே கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. சரத் பவார் இன்றைய கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையில், என்சிபி தலைவர் சரத் பவார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நேற்று தான் பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி தலைவர்கள் சரத் பவாரை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் லோக்சபா தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குத் திட்டத்தை வகுக்க, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்பதில் நேற்று வரை சஸ்பென்ஸ் நிலவியே வந்தது.
ஆம் ஆத்மி: டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பாஜக கொண்டு வந்துள்ள மசோதாவுக்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று ஆம் ஆத்மி கூறி வந்தது. நேற்று வரை இதில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே நேற்றைய தினம் இந்த மசோதாவை நிச்சயம் எதிர்ப்போம் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்து கொள்வதாக அறிவித்தது.
இன்று நடக்கும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளார். மேலும் மூத்த எதிர்க்கட்சி தலைவர்களான ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், ஹேம்நாத் சோரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அதேநேரம் கேசிஆர், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்னாயக் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை.
24 vs 30: இன்று நடக்கும் கூட்டத்தில் மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பாஜகவின் என்டிஏ கூட்டணியும் டெல்லியில் கூட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது என்டிஏ கூட்டணியில் 24 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் 6 கட்சிகள் பாஜகவுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, செவ்வாய்க்கிழமை நடக்கும் கூட்டத்தில் மொத்தம் 30 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டம் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பதிலடியாக இருக்கும்.
அதாவது இன்றைய பெங்களூர் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடக்கும் என்டிஏ கூட்டத்தில் 30 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளலாம். இருப்பினும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இதே கூட்டணி தொடருமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications