Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடி மேல் அடி.. லோக்சபா தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தொடர் சறுக்கல்! நிலைமை கைமீறிப் போகுதே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலைத் தொடர்ந்து 2 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவ உள்ளது முக்கியமான பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி காங்கிரஸ், தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

exit polls 2024 haryana election exit polls jammu kashmir election exit polls

மேலும் குலாம் நபி ஆசாத், இன்ஜினீயர் ரஷீத் உள்ளிட்டோரின் சிறிய கட்சிகள், மக்கள் செல்வாக்குமிக்க சுயேச்சைகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டன.

எக்ஸிட் போல் முடிவுகள்: ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 24 - 34, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 35 - 45 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-32, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 40-48 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 4-7, இதர கட்சிகளுக்கு 12-18 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23-27 இடங்கள், காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 46-50 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானா தேர்தல்: ஹரியானாவில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஜன்நாயக் ஜனதா, ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: ஹரியானாவில் ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 53 - 65 இடங்களும், பாஜகவுக்கு 18 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4 - 13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டியா டுடே - சி வோட்டர் எக்ஸிட் போலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 - 58 இடங்களும், பாஜகவுக்கு 20 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 10 - 14 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 44-54, பாஜகவுக்கு 19-29 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள், பாஜகவுக்கு 20-32 இடங்கள், இதர கட்சிகளுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-35, காங்கிரஸுக்கு 51-61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துரூவ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22-32, காங்கிரஸ் கட்சிக்கு 50-64, மற்ற கட்சிகளுக்கு 2-8 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆக, கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல் கணிப்புகளுமே ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கணித்துள்ளன. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, சில கணிப்புகள், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கும் எனக் கணித்துள்ளன.

மேலும், ஜம்மு காஷ்மீரில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படலாம். மெகபூபா முஃப்தி கிங் மேக்கர் ஆகக்கூடும் என்றும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, இந்த 2 மாநில எக்சிட் போல் முடிவுகள், பாஜகவுக்கு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளன.

லோக்சபா தேர்தலில் சறுக்கல்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தனியாக 240 இடங்களில் வென்றது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வென்று பலம் பெற்றது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இந்த நிலைமை அப்படியே மாறி, இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இடைத்தேர்தல் தோல்வி: லோக்சபா தேர்தல் முடிவடைந்த கையோடு தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்திருந்த நிலையில், தற்போது 2 மாநில சட்டசபை தேர்தலிலும் சறுக்கலைச் சந்தித்துள்ளது. பாஜக தொடர்ந்து தோல்வி முகம் கண்டு வருவதால் எதிர்க்கட்சிகள் குஷியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+