மனைவியுடன் நடந்தது உறவா, பலாத்காரமா என நிரூபிப்பது கடினம்: பாஜக எம்.பி. பேச்சு! ஸ்மிருதி இராணி ஆதரவு
டெல்லி: நாட்டில் நடக்கும் திருமணத்தை வன்முறை என்று சொல்வதையும், ஆண்களை வன்புணர்வு செய்பவர்கள் என்று அறிவிப்பது நல்லதல்ல என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதன்பிறகு கேள்வி பதில் நேரம் தொடங்கியது.
அப்போது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து கம்யூனிஸ்ட் எம்.பி பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்தார்.

திருமணம்
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி சுஷில் மோடி கூறுகையில், திருமண வன்புணர்வை குற்றமாக்குவது திருமண நிகழ்வுகளையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். திருமண உறவில் ஒரு மனைவி எப்போது சம்மதித்தாள், சம்மதிக்கவில்லை என்பதை நிரூபிப்பது கடினம்" என்று தெரிவித்தார். அதேநேரம், இதற்கு பதிலளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் கற்பழிப்பவர் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானி
இதற்கு ஸ்மிருதி இராணி பதிலளிக்கையில் ''திருமணத்தை வன்முறை என்றோ, மனைவியுடன் ஒவ்வொரு ஆண்களும் உடலுறவு கொள்வதை வன்புணர்வு என்றோ அறிவிப்பது நல்லதல்ல. நாட்டில் பெண்களுக்கு உதவி செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட ஹெல்ப் லைன் நம்பர்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அதேநேரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே மத்திய அரசின் முதன்மை" என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

பிரமாண பத்திரம்
கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ''திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது" என கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் தெரிவித்தார் பிரதமர் மோடி, மேலும் தாம்பத்திய உறவை குற்றமாக கருதக்கூடாது என்பதே தனது அறிவுரை என்றும் கூறினார்.

நீதிமன்றம்
திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதி அதை சட்டப்படி குற்றமாக்கும் வகையில் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications