பாலியல் வன்கொடுமை வழக்கு.. “நீதிமன்றம் அதன் வேலையை செய்யும்!” சொல்கிறார் பாஜக எம்பி பிரிஜ் பூஷன்
டெல்லி: நீதிமன்றம் அதன் வேலையை செய்யும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரிஜ் பூஷண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த நிலையில், சில பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தபோது வீரர்கள் அதை மறுத்துவிட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடிய பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர். இந்த முறை அரசியல் அமைப்புகளின் ஆதரவை வீரர்கள் நாடினர். மேலும், விவசாய சங்கங்களும் வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுவது கைவிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 15ம் தேதி டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேபோல அடுத்த மாதம் 11ம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெறாமல் இருக்கும் நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை மறுத்த அவர்கள் எங்கள் போராட்டம் சட்ட ரீதியாக தொடர்கிறது, வீதிகளில் இல்லை என்று தெளிவுபடுத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக எம்பி பிரிஜ் பூஷனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர், "வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே என்னால் எதையும் கூற முடியாது. நீதிமன்றம் அதன் வேலையை செய்யும்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications