Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதில் கேட்கவே முடியாத வார்த்தைகள்.. நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி பகீர்! டென்ஷனான சபாநாயகர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மிக மோசமான காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளால் சமாஜ்வாடி எம்பி டேனிஷ் அலியை பார்த்துப் பேசிய சம்பவம் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடர் முதலில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நிலையில், அதன் பிறகு இந்தக் கூட்டம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

 BJP MP Ramesh Bidhuris Offensive Comments in Parliament creates huge Outrage Speaker Warns

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வெற்றிகரமாகத் தாக்கலானது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் நடந்த இதே அவையில் மிக மோசமான சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மோசமான பேச்சு: நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி சமாஜ்வாதி எம்பி டேனிஷ் அலியை பார்த்து மிக மோசமான காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளால் பேசினார். மேலும், வகுப்புவாத கருத்துகளையும் அவர் டேனிஷ் அலியை பார்த்துக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ரமேஷ் பிதுரியை கடுமையாக எச்சரித்தார். மேலும், அவரது கருத்துக்களும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

லோக்சபாவில் சந்திரயான் வெற்றி குறித்து நடந்த விவாதத்தின் போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த விவாதத்தில் இஸ்லாமிய முஸ்லிம் எம்பி டேனிஷ் அலியை பார்த்து ரமேஷ் பிதுரி மோசமான மற்றும் வகுப்புவாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது பேச்சைக் கண்டித்துள்ள ஒம் பிர்லா மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

டிரெண்டாகும் வீடியோ: ரமேஷ் பிதுரியின் பேச்சு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தலைவர்களும் ரமேஷ் பிதுரியின் பேச்சு வீடியோவை பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். டேனிஷ் அலியை பார்த்து ரமேஷ் காதிலேயே கேட்க முடியாத மிக மோசமான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நாடாளுமன்றத்திலேயே அவர் இப்படிப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருக்கிறார். அவரும் இந்த மோசமான பேச்சை எதுவும் கண்டிக்கவில்லை.

இதற்கிடையே டேனிஷ் அலி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "உங்கள் தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடந்தது சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எம்.பி.யாக உள்ள எனக்கு மனவேதனை அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் பா.ஜ.க எம்.பி.யின் பேச்சை மிகக் கடுமையாகச் சாடினர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மன்னிப்பு: இதையடுத்து சிறிது நேரம் கழித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். எம்பி கூறிய கருத்துக்களால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இது போதாது என்றும், ரமேஷ் பிதுரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அல்லது கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இது நாட்டிற்கே அவமானம். ராஜ்நாத் சிங்கின் மன்னிப்பு அரை மனதுடன் உள்ளது. அதை ஏற்க முடியாது.. இது பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயல்.. ரமேஷ் பிதுரி பேச்சு ஒவ்வொரு இந்தியருக்கும் அவமானம். அவரை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை தேவை: மேலும், முந்தைய அமர்வில் பாஜக அமைச்சர்களை அவமதித்தாக கூறி காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், பாஜக எம்பி இவ்வளவு மோசமாகப் பேசியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி தனது எக்ஸ் பக்கத்தில், "நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் டெல்லி பாஜக எம்பி முஸ்லிம் எம்.பி.யை பார்த்து இந்த மோசமான வார்த்தைகளைச் சொல்கிறார்.. இதுதான் பாஜகவின் கலாச்சாரமா? நாடாளுமன்ற வரலாற்றில் இது கறுப்பு நாள்" என்று அவர் தெரிவித்தார். இவ்வளவு மோசமான பேச்சுக்கு பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பாஜகவின் நிலைப்பாட்டையே காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளனர். மேலும், பிரதமர் மோடி இதில் மவுனம் காப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதை ஏற்க முடியாது: இது குறித்து நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் உமர் அப்துல்லா, "உங்கள் மாண்புமிகு எம்பி என்ன பேசியுள்ளார் என்பதைப் பாருங்கள்.. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதானமாக முன்னிறுத்துகிறார்கள். இந்தளவுக்கு வெறுப்பைப் பரப்பும் பாஜகவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

அவர் எங்களைப் பயங்கரவாதி என்று அழைத்தால் ஓகே எப்போதும் சொல்வது எனக் கடந்து போகலாம். ஆனால், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பார்த்து மோசமான வார்த்தைகளால் பயன்படுத்தியுள்ளார். அதை ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார். ரமேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+