Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகர்ண தூக்கத்தில் ராகுல்? நெற்றியில் அடித்த மத்திய அமைச்சர்.. குபீரென சிரித்து பாஜகவினர் கேலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தூங்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் பாஜக எம்பிக்கள், மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் ராகுல் காந்தியை நோக்கி விரலை நீட்டி கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்ற நிலையில் அவர்கள் கேலி, கிண்டல் செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்து கொள்ளப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Rahul Gandhi Waqf bill waqf bill amendment


முன்னதாக நேற்றைய தினம் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து லோக்சபாவில் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இன்றயை தினம் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம்பெறும் 31 எம்பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த கூட்டு குழு மசோதாவை ஆராய்ந்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும். அதனை பரிசீலனை செய்து மத்திய அரசு மீண்டும் வக்பு வாரிய திருத்த மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும்.

பதுங்கி பாய ரெடியாகும் பாஜக.. வக்பு வாரிய மசோதாவை கிடப்பில் போட்ட பின்னணி?


இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் ராகுல் காந்தி தூங்கும் வீடியோவாகும். அதாவது நேற்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த வேறையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிரே அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென்று ராகுல் காந்தி தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பார்த்து கையை நீட்டி சுட்டிக்காட்டினார். இதையடுத்து அவர் அருகில் இருந்த பாஜக எம்பி கிரிராஜ் சிங், ராகுல் காந்தியை நோக்கி விரலை நீட்டி, ‛‛அங்கே பாருங்க அவர் (ராகுல் காந்தி) தூங்குகிறார்’’ என்று சிலமுறை கூறினார். இதையடுத்து அங்கிருந்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் , பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியை பார்த்து சிரித்தனர். மேலும் மேஜையை தட்டினர். ஆனாலும் ராகுல் காந்தி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

சகதியில் கால் படாதா? காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களோ? வயநாட்டில் ராகுலிடம் சண்டைக்கு போன மக்கள்


இந்த வேளையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தனது நெற்றியில் கையை வைத்து அடித்துவிட்டு, ‛‛குறுக்கே குறுக்கே பேசாதீர்கள் என்று சொன்னால் கேட்க வேண்டும். தொடர்ந்து குறுக்கே பேச முயன்றால் அது உங்களை தூக்கத்துக்கு அழைத்து சென்றுவிடும்’’ என்று கிண்டல் செய்தார். இதனை கேட்டவுடன் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் அனைவரும் சிரித்தனர். மறுபுறம் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+