ராகுல் காந்தி அந்த வார்த்தைய சொன்னதுமே.. கொந்தளித்த பாஜக எம்.பிக்கள்.. லோசபாவில் கடும் அமளி!
டெல்லி: மத்திய அரசின் செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பெண்கள், பாஜக அரசு ஓபிசி மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசப் பேச, அவரை தொடர்ந்து பேசவிடாமல் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா குறித்து லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால், இந்த மசோதா முழுமை பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, "புதிய நாடாளுமன்றத்தில் மேலே, கீழே எங்கும் மயில் தோகைகள் என அழகாக உள்ளது. ஆனால், இங்கே நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் செயல்பாட்டில் அவர் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பெண்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் மிக முக்கிய பங்காற்றியது பஞ்சாயத்து ராஜ். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்காதது வருத்தமளிக்கிறது. ஓபிசி இட ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதா முழுமை அடையாது.
க்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கது அல்ல. அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் உள்ளனர், அதில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஓபிசி இடஒதுக்கீட்டின் படி நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறைகளில் கடைபிடிக்க முடிகிறதா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக
நடைமுறைப்படுத்த வேண்டும். அதானியின் முறைகேடுகளை மறைக்க பாஜக வெவ்வேறு உத்திகளை கையாள்கிறது. ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது" என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் முழுக்கம் எழுப்பினர். ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்ற ராகுலின் குற்றச்சாட்டை தொடர்ந்து பாஜக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். அதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்களும் கூச்சல் போட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications