“மோடி..மோடி..மோடி..” மேஜையை தட்டி வரவேற்ற எம்.பி.கள்.. மாஸாக என்ட்ரி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி : 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிமைக்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்பிக்கள் "மோடி..மோடி..மோடி.." என முழக்கமிட்டு மேஜையை தட்டி வரவேற்றனர்.
Recommended Video
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், பாஜக 4 மாநிலங்களிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடித்துள்ளது.
பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில், பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாதனை வெற்றியை பெற்றது. குறிப்பாக கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கடுமையான போட்டி மற்றும் கருத்து கணிப்புகளை மீறி வெற்றி பெற்றது.

தேர்தல் வெற்றி
உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று உபி முதல்வராக யோகி ஆதித்யநாத், மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். தேசிய அரசியலை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசம் ஒரு முக்கியமான மாநிலம் ஆகும். உத்திர பிரதேசத்தில் ஆளும் கட்சியே அடுத்ததாக மீண்டும் ஆட்சியமைத்ததாக 40 ஆண்டுகளில் வரலாறு இல்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.

பாஜகவினர் புகழாரம்
உபி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என பாஜகவினர் புகழாரம் சூட்டி வருகின்றனர். குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றிற்கும் மேலாக பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமரும், அவரது திட்டங்கள் தான் காரணம் என் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று கூடிய பட்ஜெட் அமர்வில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம் வந்தார்.

எம்பிக்கள் முழக்கம்
பிரதமர் மோடி லோக்சபாவில் தனது பாரம்பரிய இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் 5க்கும் 4 என்ற சிறந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்பிக்கள் "மோடி..மோடி..மோடி.." என முழக்கமிட்டு மேஜையை தட்டி வரவேற்றனர். எம்பிக்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் ஆளுங்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து பெரும் வரவேற்பு அளித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் இருந்தனர்.

பிரதமர் நாளை உரை
ஆஸ்திரியாவில் இருந்து நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கைக்கு அருகில் இருந்து இருந்து அவையின் இன்றைய நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்தார். அப்போதுதான் எம்பிக்கள் இவ்வாறு முழக்கமிட்டனர். முழக்கங்கள் ஓய்ந்த பிறகே, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரியக் குழுவை சபாநாயகர் வரவேற்றார். வாராந்திரக் கூட்டம் நாளை கூடும் போதும் பாஜகவின் ஆரவாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இரு அவைகளிலும் உள்ள கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி பேசுவார் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications