டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக "செம ஸ்கெட்ச்".. தமிழகத்தில் மோடியை போட்டியிட வைக்க திட்டம்.. 3 தொகுதிகளும் ரெடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் மோடியை போட்டியிட வைக்க பாஜக திட்டம்- வீடியோ

    டெல்லி: தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற வைக்க மோடியை, கன்னியா குமரி, கோவை அல்லது திருப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன் எப்போதும் இல்லாத வகையில் வரக்கூடிய லோக்சபா தேர்தல் வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. பாஜகவை அகற்ற வேண்டும்... மோடியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன.

    காங்கிரசும் பிரியங்கா காந்தியை அரசியல் களத்தில் இறக்கி விட.. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜகவும் பதிலடி பிரச்சாரத்தில் குதித்துள்ளது. புள்ளி விவரங்களும் ஒவ்வொரு ரகமாக இருக்க... பாஜக மேலும் பல அரசியல் கணக்கீடுகளை முன்வைத்து களத்தில் இறங்கி உள்ளது.

    பாஜக முக்கிய முடிவு

    பாஜக முக்கிய முடிவு

    தென்மாநிலங்களில் பாஜக போதிய வளர்ச்சி இல்லாத நிலையில் அதனை மாற்றவும் அக்கட்சி முடிவு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளை அகற்றவும், வடக்குப் பகுதியில் பாஜகவுக்கு குறையும் தொகுதிகளை ஈடுகட்டவும் பாஜக முடிவு செய்துள்ளது.

    ஒரு தொகுதியில் போட்டி?

    ஒரு தொகுதியில் போட்டி?

    அதன்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி தமது 2வது இடமாக தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற செய்திகளை அக்கட்சி யூகமாக வெளியிட்டு வருகிறது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அதை அதிகாரபூர்வமாக மறுத்துவிட்டாலும் பிரதமர் மோடி தமிழக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

    மோடி அலைக்கு திட்டம்

    மோடி அலைக்கு திட்டம்

    இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத.. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பதாவது:வேட்பாளராக மோடி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடும் தேர்தலில், பாஜக தமிழகத்தில் 6 முதல் 12 இடங்களில் வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மோடி போட்டியிடுவது தேர்தலில் ஒரு அலையை ஏற்படுத்தக் கூடும்.

    பாதிப்பை சரிசெய்யலாம்

    பாதிப்பை சரிசெய்யலாம்

    பிரதமர் மோடி தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டடால் வட இந்தியாவில் ஏற்படும் கட்சியின் பாதிப்பை சரிகட்ட உதவும். பாஜகவின் வெற்றி சதவீதம் அதிகமாகி கூடுதல் தொகுதிகளும் கிடைக்கக்கூடும். அதன் முன்னோட்டமாக தான்... அண்மையில் விடியோ காணொலி நிகழ்ச்சியில் கூட பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது அதிக ஆர்வம் காட்டினார்.

    வாக்குவங்கி

    வாக்குவங்கி

    பிரதமர் மோடி தமிழக தொகுதியில் போட்டியிட விரும்பினால் பாஜக வலுவானதாக ஓரளவு வாக்கு வங்கி அதிகம் உள்ளதாக கருதப்படும் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம்.

    விரைவில் கூட்டணி அறிவிப்பு

    விரைவில் கூட்டணி அறிவிப்பு

    கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக 5.5 சதவீத ஓட்டுகள் பெற்றது. தற்போதுஅதிமுக, தேமுதிக, பாமக மற்றும் இன்னபிற கூட்டணி கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தால்... மோடியின் 2வது தொகுதி அறிவிப்பு ஆகிய அம்சங்களும் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கிடைக்க வழிவகை செய்யும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    கை கொடுக்கும் என நம்பிக்கை

    கை கொடுக்கும் என நம்பிக்கை

    ஆக மொத்தத்தில்.. இதன்மூலம் மத்தியில் ஆட்சியமைக்க போதிய தொகுதிகள் கிடைக்காமல் போனால்... தமிழகத்தில் இருந்து கிடைக்கும் இடங்கள் கை கொடுக்கும் என்று பாஜக தலைமை திடமாக நம்புகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆக... அந்த அச்சீ தின்... எப்போது என்பது தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

    English summary
    There are reports saying that Modi will be fielded in one of the constituencies in KanniyaKumari, Coimbatore or Tirupur to win the BJP in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X