நெருங்கவே முடியாது! பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும்.

எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா
இந்த முறை மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு
இந்நிலையில் தான் இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் திரெளபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். தற்போது

இசட் பிளஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தான் ஆளும் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரால்(சிஆர்பிஎப்) இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணியில் 36 பேர்
இவர்கள் 24 மணிநேரமும் 3 சிப்ட்டாக திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளனர். மேலும் அவரது பயணங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 பேர் வரை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications